For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை செப்.16 ல் திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21ஆம் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.

 Purattasi month Puja: Sabarimala Ayappan temple to opens on Sept. 16

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி பூஜை மற்றும் திருவோண சிறப்பு பூஜையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிறைவு நாளில், படி பூஜை, புஷ்பாபிஷேகத்துடன் கடந்த 23ம் தேதி நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணுக்கு மதுவை கலந்து கொடுத்து 5 பேர் மாறி மாறி பலாத்காரம் காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணுக்கு மதுவை கலந்து கொடுத்து 5 பேர் மாறி மாறி பலாத்காரம்

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ஆம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். நிபா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் 'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
Sabarimala Ayappan Temple opens at 5 pm on the 16th for the Purattasi month Puja. Pujas will be held for 5 days till the 21st September 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X