ராகு கேது பெயர்ச்சி 2019: எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்- பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்

ராகு-கேது பெயர்ச்சி நாளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் உரிய பரிகாரங்கள் செய்த

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 13.02.2019, காலை 10.00 மணி முதல் 12.00 வரை ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது. ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு-கேது பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர். பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி

வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 13.02.2019 புதன்கிழமை அன்று கடகம் ராசியிலிருந்து இருந்து மிதுனம் ராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் மகரம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அடுத்த ஒன்றரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே சஞ்சரிப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள்.

நோய்களில் இருந்து விடுதலை

நோய்களில் இருந்து விடுதலை

‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்' என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். ‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

உடல் நோய்கள் தீரும்

உடல் நோய்கள் தீரும்

இங்குள்ள‘ஏக சரீர ராகு - கேதுவாக தரிசனம் தரும் இந்த ராகு - கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும். இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

ராகு கேது பெயர்ச்சி யாகம்

ராகு கேது பெயர்ச்சி யாகம்

வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன. இந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும், ‘ராகு - கேது பெயர்ச்சி' விமரிசையாக வருகிற 13.02.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு-கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்த பரிகார யாகங்களில் பங்கேற்கலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+