கலைஞானம் சொல்வது போல ரஜினி வீட்டில் சுக்கிரன் இருக்கிறாரா?.. ஒரு ஆய்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை: ரஜினிகாந்த் ஜாதகத்தில் லக்னாதிபதியும் ராஜ கிரகமுமான சூரியன் 4வது இடத்தில் செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ளார். சுக்கிரன் தனுசு ராசியில், புதனுடன் சேர்ந்து 5வது இடத்தில் அமர்ந்துள்ளார்.

  ஐந்தாம் இடத்தில் குருவின் வீடான தனுசு ராசியில் சுக்கிரன்,புதன் இணைந்து அமர்ந்துள்ளது ஸ்ரீவித்யா யோகமாகும். இதன்மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்களின் ரசிகர்களின் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி கூறிய கலைஞானம், ரஜினி வீட்டில் சுக்கிரன் குடியிருக்கிறார் என்று கூறினார்.

  சுக்கிரனே அனுமதி கேட்பார்

  சுக்கிரனே அனுமதி கேட்பார்

  எல்லாருக்கும் சுக்கிரதிசை சில காலம் வரும் என்று கூறியுள்ள கலைஞானம், ரஜினி வீட்டில் சுக்கிரன் நிரந்தரமாக குடியேறியுள்ளார் என்று கூறினார். சுக்கிரனே எங்காவது போகும் போது அவரிடம் அனுமதி கேட்டுத்தான் செல்வார் என்றும் கூறினார் கலைஞானம்.

  நாடாளும் யோகம்

  நாடாளும் யோகம்

  நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும். இதை நன்றாக உணர்ந்திருக்கிறார் ரஜினி.

  அரசியல் யோகம்

  அரசியல் யோகம்

  அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திரம்,திரிகோண பலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.

  5ஆம் வீடு தனுசு

  5ஆம் வீடு தனுசு

  ரஜினிக்கு மகரராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னம், 2ஆம் இடத்தில் சனியுடன் கேது அமர்ந்துள்ளார். 4ஆம் வீட்டில் சூரியனும் 5ஆம் வீடான தனுசில் புதனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளனர். 5 ஆம் வீடு பொதுவாக மேஷம், சிம்மன், தனுசு ராசிகளாக இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார் என்பது ஜோதிட விதி.

  லக்னாதிபதியின் நிலை

  லக்னாதிபதியின் நிலை

  புதன் கிரகம் பலம் பெற்று குருவின் பார்வை பெற்று 5ஆம் பாவத்தில் பலம் பெற்ற கிரகம் இருப்பது அமைச்சராகும் யோகம் தரும். லக்னாதிபதி, லக்னத்தில் இருந்தாலும் 4,7,10ல் பலமாக இருப்பது நாடாளும் யோகம் தரும். ரஜினிக்கு லக்னாதிபதி சூரியன் 4ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். இந்த விதி பொருந்தி வருகிறது.

  நடிப்பில் உச்சம்

  நடிப்பில் உச்சம்

  புதனும், சுக்கிரனும் இணைந்து சம சப்தம பார்வையாக 11வது வீட்டை பார்வையிடுகின்றனர். இதனாலேயே கலைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். 5 ஆம் வீட்டு அதிபதியான குரு 7 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். இது களத்திர ஸ்தானம்.

  வீரத்திற்கு காரணம்

  வீரத்திற்கு காரணம்

  ரஜினிக்கு 6ஆம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார். இதன் மூலம் நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும். ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான் என்கிறது ஜோதிட விதி. தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள். 4க்குடையவன் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றதால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது.

  ரஜினிக்கு ராகு கேது

  ரஜினிக்கு ராகு கேது

  அதே நேரத்தில் ரஜினிக்கு கேது குடும்ப ஸ்தானமான இரண்டாவது இடத்திலும் 8வது இடத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர். ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. மீனம், கன்னி 2, 8 ஆம் பாவகமாக அமைந்தால் அது நன்மையாகவே இருக்கும் என்கிறது ஜோதிட விதி. ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எப்போது எப்படி எதை அறிவிக்க வேண்டும் என்று
  ஜோதிட நம்பிக்கை கொண்ட ரஜினிக்கு தெரியாதா என்ன?

  சனி திசை முடிவு

  சனி திசை முடிவு

  ரஜினிக்கு சனி திசை முடியப்போகிறது. புதன் திசை தொடங்கப் போகிறது. 31ஆம் தேதிவரை காத்திருப்போம். ஏனெனில் அவருக்கு புதன் திசை தொடங்குவதே 2018ல்தான். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவாரா? அல்லது வாய்ஸ் மட்டுமே தருவாரா என்பது இன்றும் சில நாட்களில் தெரியவந்து விடும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here is the Rajinigandh jathagam. Raja yoga is formed by the combination of auspicious planets in a kundli.Planetary combinations for success in politics, Planets associated with success of politics are the Sun, Saturn, Mars, Jupiter and Rahu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற