For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம் 2019: ஸ்பரிசம் தொடங்கி மோட்சம் வரை 5 நிலைகளை கடக்கும் சூரியனும் நிலவும்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்'... எப்போது நிகழும் ?

    மதுரை: தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சூரியன், சந்திரன், சனி, குரு, கேது, புதன் என கூட்டணி அமைத்திருக்க அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் ஸ்பரிசம் தொடங்கி மோட்சம் வரை 5 நிலைகளை கடக்கிறது.

    இது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் சூரியனை கேது என்ற பாம்பு விழுங்குமா என்றெல்லாம் கேட்க வேண்டாம். ராகு கேது நிழல் கிரகங்கள். இம்முறை கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை, சூரிய கிரகணத்தினால் ஏதேனும் ஆபத்து வருமே என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். சமூக வலைத்தளங்களிலும் யு டுயூப் சேனல்களிலும் பல தகவல்கள் இதைப்பற்றியே பதிவிட்டு வருகின்றனர்.

    காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம், மற்றும் தோஷங்கள் நடைபெறும்.

    சூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்கசூரிய கிரகணம் 2019: அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்க

    ஆறு கிரகங்கள் கூடவே சூரிய கிரகணம்

    ஆறு கிரகங்கள் கூடவே சூரிய கிரகணம்

    வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு சேரும்பொழுதும் அதே நேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும். அடுத்தது தனுசில் ஆட்சி பெற்ற சுபத்தன்மை கொண்ட குருவோடு எந்த கிரகம் சேர்ந்தாலும் சுபத்துவம் பெரும். குருவும் சந்திரனும், குருவும் சனியும், குருவும் கேதுவும், குருவும் சூரியனும், குருவும் புதனும் சேர்ந்து இருப்பது பல்வேறு யோகங்களை தரும். இந்த கால கட்டத்தில்தான் சூரிய கிரகணம் எனப்படும் வானியல் அதிசயமும் நிகழ உள்ளது.

    சூரியனை தீண்டும் நிலவு

    சூரியனை தீண்டும் நிலவு

    இந்த சூரிய கிரகணம் ஸ்பரிசம் தொடங்கி மோட்சம் வரை 5 நிலைகளை கடக்கிறது. சூரியனை நிலவு தீண்டுவது ஸ்பரிசம், அதுவே முதல்நிலை, அடுத்து சூரியனுக்குள் நிலவு முழுமையாக சென்று விடுவது இரண்டாவது நிலை. அடுத்தது நிலவினால் சூரியன் மறைக்கப்பட்டு விளிம்பு பிரகாசிப்பது மூன்றாவது நிலை இதுவே வளைய சூரிய கிரகணம்.

    நிலவு செய்யும் மாயம்

    நிலவு செய்யும் மாயம்

    சூரியன் நெருப்பு வளையமாக பிரகாசிக்கும். பின்னர் படிப்படியாக நிலவு சூரியனிடம் இருந்து விலகத் தொடங்குவது நான்காவது நிலை. அடுத்து கிரகணம் முழுமையாக விலகுவது ஐந்தாவது நிலை இதுவே மோட்ச நிலையாகும்.

    கிரகணம் தென்படும் இடங்கள்

    கிரகணம் தென்படும் இடங்கள்

    இந்த அதிசய நிகழ்வு இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கர்நாடக மாநிலத்தின் தென்பகுதி, கேரளாவின் வடபகுதியிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில்தான், அதிக அளவில் இந்த அபூர்வ சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். 26ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதை பொதுமக்கள் பார்க்கலாம். கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

    என்ன செய்யக்கூடாது

    என்ன செய்யக்கூடாது

    சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்வது தவறு. கிரகணத்தின்போது வெளியே செல்லலாம், சாப்பிடலாம், கர்ப்பிணி பெண்களும் இயல்பாக இருக்கலாம் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்றாலும் கிரகண நேரத்தில் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் வேகமாக போகாதீங்க. புதிய முயற்சிகள் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து எதையும் போடாதீங்க என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள். கிரகண நேரத்தில் நல்லதை நினைத்து பிராத்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

    English summary
    According to the Hindu Panchang, the third Solar Eclipse will occur during Amavasya in the month of Paush on 26 December, Thursday. Although this is an Annular Solar Eclipse, it will appear partially in other parts of India except for Tamil Nadu, Kerala and parts of Karnataka, where it will be visible in its annular ring shaped form.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X