போலீஸ், ராணுவ வேலை தரும் செவ்வாய் பகவான்- காக்கிச்சட்டை போட ஆசையா?

Posted By: c JEYALAKSHMI
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு பெற்றிருந்தால் அந்த ஜாதகர்கள் காவல் துறை தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள் என்பது ஜோதிட விதி.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பத்தை நான் தேடிப் பார்த்தேன். பாவி ஒருவன் இல்லை என்பது சித்தர் வாக்கு. உத்யோக ஸ்தானம் என்பது இந்த பத்தாம் இடம். கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும்.

காக்கிச்சட்டை

காக்கிச்சட்டை

செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துறை தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.

அரசு வேலை யாருக்கு

அரசு வேலை யாருக்கு

சூரியன், சனி, குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜாதகக் கட்டத்தில் எங்கே அமர்ந்துள்ளன என்று பார்த்து ஆராய்ந்து காக்கிச்சட்டை, சீருடை அணிவதற்கான அமைப்பு இருக்கிறதா என்று கூற வேண்டும். பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

பத்தில் செவ்வாய்

பத்தில் செவ்வாய்

சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். 10ல் செவ்வாய் இருந்தால் காவல்துறையில் மிகப்பெரிய பதவி, ராணுவத்தில் தளபதி போன்ற பதவிகள் வகிப்பார்கள்.

காக்கிச்சட்டை யோகம்

காக்கிச்சட்டை யோகம்

ஜாதகத்தில் 10ல் செவ்வாய் இருக்கும் அனைவருமே இதுபோன்று பதவிகள் வகிப்பார்களா என்று கேட்டால் கிடையாது. சிலருக்கு காரியவன் காரியத்தில் அமர்ந்தால் காரிய பங்கம் என்ற விதியின் படி மாறியும் நடக்கும். ஜாதகர் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறார்கள். அந்த லக்னத்திற்கு 10வது வீடாக யாருடைய வீடு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். செவ்வாய்க்கு எதிர்கோள்கள் 10ஆம் இடத்தைப் பார்த்தால் எதிர்மறையாக அமையும். 10ல் செவ்வாய் இருந்தால் காவல்துறை, ராணுவத்தில் இருப்பார்கள் என்று சொல்வது போல், செவ்வாயை பகைக் கோள் பார்த்துக் கொண்டிருந்தால் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

முருகனை சரணடைவோம்

முருகனை சரணடைவோம்

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பாகும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் பகவானையும் வழிபட்டால் வீடு, மனை யோகம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mars rules the corrage and confidence, mars represents Police, Military and Para military department comes under the influnce of Mars. fire is the element of mars. real estate business, builders.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற