Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி ஆராட்டு... திருவோணம் : சரிமலையில் 2022 ஆம் ஆண்டு நடைத் திறக்கப்படும் நாட்கள் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த ஆண்டுகாண தரிசனத்திற்காக கோயில் நடை திறப்பு தேதிகள் குறித்தான கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பத்தனம் திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் முடிந்து 2022ஆம் ஆண்டு முதல் நடை திறக்கப்படும் நாட்கள் குறித்த அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் இந்த தேதிகளை குறித்து வைத்துக்கொண்டு சாமி தரிசனத்திற்கு செல்லலாம்.

கேரளா மாநிலம் சபரிமலையில் பிரம்மச்சாரியாக அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகை தருகின்றனர். கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நடப்பாண்டு மண்டலபூஜைக்காக சபரிமலைக் கோவில் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 25ஆயிரம் பேர் தினசரியும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்கு வரலாம் என தேவசம்போர்டு நிர்வாகம் கூறியுள்ளது.

ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

இந்த நிலையில் வரும் 2022ம் ஆண்டு நடை திறக்கப்படும் நாட்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மாசி மாதம் கும்ப மாத பூஜைக்காக கோவில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8ம் தேதி திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9ம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். 18ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.

விஷு பண்டிகை

விஷு பண்டிகை

சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10ம் தேதி நடை திறக்கப்பட்டு 18ம் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15ம் தேதி விஷு பண்டிகை விழா நடைபெறும். வைகாசி மாத பூஜைக்காக மே 14ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 19ஆம் தேதி நடை அடைக்கப்படும்.

திருவோணத் திருவிழா

திருவோணத் திருவிழா


சபரிமலை அய்யப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி ஜூன் 8ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16ம்தேதி நடை திறக்கப்பட்டு 21ம்தேதி வரை பூஜைகள் நடக்கும்.
ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்.

விஷேச பூஜைகள்

விஷேச பூஜைகள்

புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டு 21ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17ம் தேதி நடை திறக்கப்படும். 22ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் 24ஆம் தேதி திறக்கப்படும். 25ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

டிசம்பர் 27,2022 மண்டலபூஜை

டிசம்பர் 27,2022 மண்டலபூஜை

வரும் 2022ம் ஆண்டு சபரிமலை மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மண்டலபூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+