• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க!

By Mayura Akilan
|
  முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க!- வீடியோ

  சென்னை: ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலிரவு வாழ்நாளில் மறக்கமுடியாது. அந்த முதலிரவுக்கு முக்கியமாக முகூர்த்தம் குறிப்பார்கள். அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தவே இந்த கட்டுரை.

  திருமணமான ஆணும் பெண்ணும் இணைவது சாதாரண விசயமல்ல. இன்றைய லிவ் இன் வாழ்க்கையில் இதெல்லாம் தேவையா என்று யோசிப்பவர்களுக்கான கட்டுரை அல்ல. நமக்குப் பின்னர் இந்த உலகத்தில் நாம் விட்டு விட்டு போகக்கூடிய வருங்கால சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை மேற்கொண்டு படிக்கலாம்.

  நல்ல பிள்ளைகளை உருவாக்குவதற்கு நல்ல எண்ணங்களை விதைப்பது அவசியம். அந்த நல்ல பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயற்சி செய்யும் நேரமும் நல்ல நேரமாக இருக்க வேண்டும். உன்னை எல்லாம் எந்த நேரத்தில பெத்தாங்களோ? பேசமா உங்க அம்மா அப்பா அந்த நேரத்தில நல்ல சினிமாவிற்கு போயிருக்கலாம் என்றுதான் நம் பிள்ளைகள் கண்டவர்களிடமும் திட்டு வாங்கும்.

  உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

  முதலிரவு நடக்கக் கூடாத நட்சத்திரங்கள்

  முதலிரவு நடக்கக் கூடாத நட்சத்திரங்கள்

  இந்த சாந்தி முகூர்த்தத்தை காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் வைக்கக்கூடாது.

  இந்த நட்சத்திரங்களில் முதலிரவு மட்டுமல்ல... வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாதாம்.

  கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் ஆகிய மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள் எனப்படுகின்றன. அதேபோல

  மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்களாகும். புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரம் உள்ள நாட்களில் சாந்தி முகூர்த்தம் குறிக்கக் கூடாது.

  முகூர்த்த நேரம் குறிப்பது ஏன்?

  முகூர்த்த நேரம் குறிப்பது ஏன்?

  கண்ட நேரத்தில் புது மண தம்பதிகள் இணைந்து அதனால் பிறக்கப்போற குழந்தைக்கு செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம் என தோஷமாக அமைந்து விட்டால் கஷ்டம்தான். அப்புறம் ரத்த வெறி, பாலியல் வன்முறை வெறி பிடித்த சைத்தான்களாகப் பிறந்து சமூகத்திற்கு கேடு செய்வார்கள். முதலிரவு நன்றாக அமைந்தால்தான் அதன்பின் வரப்போகிற அனைத்து இரவுகளும் நன்றாக அமையும். எனவேதான் திருமணத்திற்கு நேரம் குறிப்பது போல முதலிரவுக்கும் நல்ல நேரம் குறிக்கின்றனர்.

  முக்கியமான முகூர்த்தம்

  முக்கியமான முகூர்த்தம்

  சாந்தி முகூர்த்தமானது தனிப்பட்ட கணவன் - மனைவியின் மன சந்தோஷ ஆரம்பத்துக்காக நிர்ணயிக்கப்படுவது அல்ல. பிரஜோத்பத்தி என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சாந்தி முகூர்த்தம். பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு. அந்தக் கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி. அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் மகன், மகள் வயிற்றில் ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

  ஆண், பெண் இணைவு

  ஆண், பெண் இணைவு

  வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்சகதிக்குச் செல்ல இயலும். சிவமும், சக்தியும் ஐக்கியமானால் மட்டுமே உலகத்தில் உயிர்கள் தோன்ற முடியும். எனவேதான் படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது.ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

  உத்தரயண காலம்

  உத்தரயண காலம்

  உத்தராயண கால கட்டமான தை முதல் ஆனி மாதம் வரை இருக்க வேண்டும். அதே போல சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருக்க கூடாது. சந்திரன் கேது இணைவு, சூரியன் + ராகு + சனி, சனி + செவ்வாய் குரு உடன் ராகு, கேது சனி சேர்ந்திருக்க கூடாது. கிரகங்களின் சேர்க்கை சரியாக இருந்தால்தான் சாந்தி முகூர்த்தம் சரியாக நடந்து நல்ல புத்திசாலியான, ஆரோக்கியமான, நல்ல எண்ணங்களைக் கொண்ட குழந்தைகள் கருவாகி உருவாகும்.

  சுப கிரகங்களின் பார்வை

  சுப கிரகங்களின் பார்வை

  அன்றைய திதி துவிதியை,திரிதியை,சஷ்டி,சப்தமி, தசமி, ஏகாதசி,துவாதசி ,திரயோதசி ஆக இருக்கவேண்டும்

  சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ள சமயத்தில் மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய லக்னங்கள் உதயமாகி இருக்கவேண்டும். சுபர்களின் பார்வை இருக்க வேண்டும். மேற்படி லக்னத்துக்கு 1-7-8 பாவங்கள் காலியாக இருக்க வேண்டும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Shanti Muhurtham for First Night during that particular day. There would be no malefic planet in the 7th House from the Muhurtha day. The marriage should not be fixed during the period when Venus (sukra) is afflicted in Transit, since Venus is important planet for Marital Happiness.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more