சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் 7 எலுமிச்சம் பழம், விபூதி வைத்து பூஜை - என்ன மாற்றம் நிகழும்
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உத்தரவுப்பெட்டியில் 7 எலுமிச்சம் பழம்,விபூதி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உத்தரவுப்பெட்டியில் 7 எலுமிச்சம் பழம்,விபூதி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு போகர் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவான நிலையில் மீண்டும் மருத்துவ குணம் நிறைந்த விபூதியும் எலுமிச்சையும் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது.
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிறப்பு வாய்ந்த கோவிலாகும். அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும்.
இந்த தலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.

போகர் சித்தர் படம்
இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் கடலூரை சேர்ந்த பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரின் உருவப்படம் வைத்து பூஜை செய்து, பின்னர் உத்தரவு பெட்டிக்குள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து மாற்றம் எதுவும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

விபூதி எலுமிச்சை
இந்த நிலையில், நேற்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, உத்தரவு பெட்டிக்குள் வைத்திருந்த போகர் உருவப்படம் அகற்றப்பட்டு, 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ குணம்
பக்தர் கனவில் இறைவன் தோன்றி தெரிவிக்கும் வரை இந்த பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலம் என்பதால் மக்களின் நோய்கள் நீக்கும் மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சையும், விபூதியும் வைத்து உத்தரவுப்பெட்டியில் பூஜை செய்யப்படுகிறது.

ஆண்டவர் உத்தரவுப்பெட்டி
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூக்கட்டி உத்தரவு கேட்கும்
பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார். மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள். அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என கோவில் நிர்வாகிகள் விளக்கம் கொடுத்தனர்.

பூஜித்தால் என்ன பலன்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது. இதுவரை நூற்றுக்கணக்கான பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது விபூதியும் எலுமிச்சம்பழங்களும் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications