For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதியில் தொடர் மழையால் ஏழுமலையானை தரிசிக்க முடியலையா? தேதியை மாற்றலாம்

திருப்பதில் ஏற்பட்ட கனமழையால் ஏழுமையானை தரிசிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தேதியை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமழை ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கனமழை காரணமாக நவம்பர் 18 தொடங்கி 30ஆம் தேதி வரை வர முடியாமல் போனவர்கள், அடுத்த 6 மாதத்திற்குள் ஏதேனும் ஒரு தேதியை மாற்றிக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தென்மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் கரையை கடந்த காரணத்தால் ஆந்திராவில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருப்பதியில் வரலாறு காணாத அளவிற்கு பெருமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் சிலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் தரிசனத்திற்கு வர தடை விதிக்கப்பட்டது.

Tirupati due to continuous rains sami dharsan date can be changed

ஆன்லைன் மூலம் சாமி தரிசனம் செய்ய புக் செய்தவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டனர். இந்த நிலையில் கனமழையால் ஏழுமையானை தரிசிக்க தடை விதிக்கப்பட்டதால் அந்த தேதிக்கு பதிலாக வேறொரு நாளில் சாமி தரிசனம் செய்யும் தேதியை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 18 தொடங்கி 30ஆம் தேதி வரை திருப்பதி வர முன்பதிவு செய்து கனமழை காரணமாக வர முடியாமல் போனவர்கள், அடுத்த 6 மாதத்திற்குள் ஏதேனும் ஒரு தேதியை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு

திருச்சானூர் பிரம்மோற்சவம்

Recommended Video

    Tirupati-யில் வரலாறு காணாத மழை வெள்ளம் | Tirupati Flood | Oneindia Tamil

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நவம்பர் மாதம் 29ஆம் தேதி காலை லட்சங்குன் குமார்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது. 30ஆம் தேதி காலையில் கொடியேற்றமும், இரவில் சிறிய வாகன சேவையும் நடக்கிறது. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி பெரிய வாகனம், 2ஆம் தேதி சிம்ம வாகனம், 3ஆம் தேதி கல்ப விருட்ஷ வாகனம், அனுமன் வாகனம், 4ஆம் தேதி பல்லக்கு உற்சவம், வசந்தோற்சவம் மற்றும் கஜ வாகனம் நடக்கிறது. 5ஆம் தேதி காலை சர்வ சக்திகளின் வாகனம், மாலையில் தங்கத் தேர், இரவில் கருட வாகனம், 6ஆம் தேதி சூரிய ஒளி வாகனம், நிலவொளி வாகனம், 7ஆம் தேதி தேர் திருவிழா, சர்வபூபால வாகனம், குதிரை வாகனம், 8ஆம் தேதி பஞ்சமிதீர்த்தம், கொடி இறங்குதலுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

    English summary
    TTD has announced that those who have booked online to visit Thirumalai Ezhumalayana and are unable to come due to heavy rains from November 18 to 30, can change any date within the next 6 months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X