• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குனி மாதத்தில் மகரத்தில் சனியோடு கூட்டணி சேரும் செவ்வாய் - யாருக்கு பாதிப்பு வரும்

|

சென்னை: பங்குனி மாதம் சூரியன் குருவின் வீடான மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். நீர் ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும் வெயில் பட்டையை கிளப்பும். இந்த இடத்தில்தான் புதன் நீசமடையப்போகிறார். இந்த மாதத்தில் மகரத்தில் செவ்வாய் உச்சமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று ரிஷபம் ராசியில் அமரப்போகிறார். இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. அதே நேரத்தில் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் சனியோடு செவ்வாய் கூட்டணி சேருவதுதான் சில பிரச்சினைகளை தரும். இந்த பங்குனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி செவ்வாய் இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் எந்த ராசியில் கூட்டணியாக இருந்தாலும் ஆபத்தானது என்கிறது ஜோதிட நூல்கள்.

2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் விருச்சிக ராசியில் செவ்வாய் சனி சேர்க்கையால் ஏற்பட்டது என்று ஜோதிடர்கள் கணித்து கூறினர். அதே போல ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த போராட்டங்களும் கடந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தும் தனுசு ராசியில் சனியோடு செவ்வாய் சேர்ந்த போது நிகழ்ந்தது.

வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம்.

பிரச்சினைக்கு உரிய கூட்டணி

பிரச்சினைக்கு உரிய கூட்டணி

செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் சூறாவளியை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்னையாலும் உண்டாக்கும். நீதிமன்றத்தில், எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.

உடல் நல பாதிப்பு

உடல் நல பாதிப்பு

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்னைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் மேல் கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாதல் என பல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

உலக அளவில் பாதிப்பு

உலக அளவில் பாதிப்பு

எந்த வீட்டில் இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி சேருகிறதோ அதற்கேற்ப உலக அளவில் பாதிப்புகள் ஏற்படும். சும்மாவே கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவிற்கு இந்த கூட்டணியால் மக்களின் உடல்நலப்பிரச்சினை மேலும் பாதிப்பிற்கு உள்ளாகுமாம். இந்தியாவில் பொருளாதார பிரச்சினை மேலும் பாதிக்கப்படும். நிதிச்சிக்கல்கள் அதிகமாகும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். விபத்துகள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. 4ஆம் வீட்டில் இந்த கூட்டணி சேர்ந்தால் நில அதிர்வு, பூகம்பம், கட்டிடங்களில் தீ விபத்துகள் ஏற்படும்.

தொழிலில் முன்னேற்றம்

தொழிலில் முன்னேற்றம்

மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானமான மகரம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி சேர்வதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கப் போகிறது. ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். காலாகாலத்தில், முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும். உங்க ராசிநாதன் உச்சம் பெற்று உங்களை பார்ப்பது சிறப்பான யோகத்தை கொடுக்கும். உங்களுக்கு தெம்பும் தைரியமும் அதிகமாகும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் கவனிங்க.

நிதானம் தேவை

நிதானம் தேவை

ரிஷபம் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனியோடு செவ்வாய் இணைகிறார். உங்க ராசிக்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. மந்த நிலை மாறி சுறுசுறுப்பு அதிகமாகும். பிரச்சினைகள் தீரும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்து சனி ஆட்டி படைக்க கூடவே உச்சம் பெற்ற செவ்வாயின் சேர்க்கை ஒரு வழி செய்து விடும். பேச்சிலும் செயலிலும் நிதானமாக இருங்க. கோபத்தோடு எழுந்தா நஷ்டப்பட்டுதான் உட்காருவீங்க இந்த 45 நாட்கள் நீங்க கவனமாக இருங்க

விட்டுக்கொடுத்து போங்க

விட்டுக்கொடுத்து போங்க

கடகம் ராசிக்கு ஏழாம் வீடு களத்திர ஸ்தானம், ஏற்கனவே கண்டச்சனி காலம் கவலையை தந்து கொண்டிருக்கிறது. இப்போது ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. பெரிய பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக்கங்க. சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் இந்த கூட்டணி சேருகிறது. நோய் எதிரி கடன் ஸ்தானம். நோயாளிகள் கவனமாக இருங்க. கடன் பிரச்சினை அதிகமாகும் கவனமாக இருங்க. கடன் கிடைக்குதேன்னு வாங்கி போடாதீங்க. உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரலாம் கவனமாக இருங்க.

கவனம் தேவை

கவனம் தேவை

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த கூட்டணி சேருகிறது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேர்வு நேரம் என்பதால் அவர்களின் நட்பு வட்டாரத்தை கண்காணியுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தா கூட உடனே கவனிங்க. துலாம் ராசிக்கு நான்காம் வீடான மகரம் ராசியில் இந்த செவ்வாய் சனி கூட்டணி சேருகிறது. நெருப்பு விசயங்களில் கவனமாக இருங்க. வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் பெரிசு பண்ணாதீங்க. அப்புறம் பிரிவு நிரந்தரமாகிடும். உங்க ராசிக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. சனியின் பார்வையும் தொழில் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வோடு இடமாற்றமும் கிடைக்கும். அது மனதிற்கு பிடித்த டிரான்ஸ்பராக இருக்கும்.

புரமோசன் கிடைக்கும்

புரமோசன் கிடைக்கும்

விருச்சிகம் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சனி செவ்வாய் கூட்டணி சேருகிறது. இந்த கூட்டணியால் நீங்க செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் இளைய சகோதரர்களுடன் நீங்க சமாதானமாக போங்க சண்டை எதுவும் வேண்டாம். தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இந்த கூட்டணி சேருகிறது. பேச்சில் கவனமாக இருங்க. யாரையும் கோபமாக பேசாதீங்க. சூடான வார்த்தைகள் குடும்பத்தில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிடும் எனவே எச்சரிக்கையாக பேசுங்க.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

மகரம் ராசிக்காரங்களே உங்க ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் கூடுகின்றன. உடல் நலத்தில் பாதிப்பு வரலாம் கவனமாக இருங்க. சின்ன பிரச்சினைகள் வந்தாலும் உடனே மருத்துவமனைக்கு போங்க. சொந்த பந்தங்களுக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உங்க தலையில் கவனமாக இருங்க. கும்பம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி சேருவதால் பணத்தை பத்திரமாக பாத்துக்கணும். நீங்க எதையும் பட்டுன்னு பேசிறாதீங்க. பயணங்களில் கவனமாக இருங்க. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசாதீங்க. மீனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சனி கூட்டணி சேருகிறது. இந்த கூட்டணி உங்க ராசிக்கு பண வருமானத்தை கொடுக்கப் போகிறது. அதே நேரத்தில் மூத்த சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. விட்டுக்கொடுத்து போங்க.

 
 
 
English summary
Panguni masam begins in March, ends in April 2020. Rasi palan for the Tamil month of Panguni from March 13,2020 to April 14.This month Saturn and Mars conjuction in Makaram Rasi check out what is the effect and remedies for 12 zodiac signs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X