சனி பெயர்ச்சி 2023: ஏழரை சனி என்ன செய்யும்..பாத சனியில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம்
சென்னை: ஏழரை சனி பிடித்து இப்படி ஆட்டி வைக்குதே என்று பலரும் புலம்புவார். நோய் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, உறவினர்களுடன் பிரச்சினை, குடும்பத்தில் நிம்மதி இன்மை என பல சிக்கல்களை மகர ராசிக்காரர்கள் சந்தித்து வருகிறார்கள். இனி இரண்டரை ஆண்டுகள் பாத சனியாக தொடரும் ஏழரை சனியால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. ஏழரைச்சனி என்பது ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. ராசியில் சனி அமர்வது ஜென்ம சனி, ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பாத சனியாகவும் தொடரும். மகர ராசிக்காரர்களுக்கு ஜெம்
மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் ஏழரை சனி, பொங்குசனி,மங்கு சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும். ஏழரைச்சனி என்பது ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது.

ஏழரை சனி ஆரம்பம்
ஏழரை சனி தொடங்கும் முதல் இரண்டு ஆண்டு காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி அள்ளித்தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரய செலவுகளையும் கொடுப்பார். மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

ஜென்ம சனி
மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான மன உளைச்சல் இருக்கும். ஏழரைச்சனியின் நடுப்பகுதியான கொஞ்சம் சவாலான நேரம். சரியான பரிகாரங்கள் செய்யாவிட்டால் படுத்தி எடுத்துவிடும்.

என்னென்ன பாதிப்புகள்
ஏழரை சனி காலத்தில் இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் இழப்பின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

பாத சனி காலத்தில் பாதிப்பு
பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். சனி கொடுத்த படிப்பினைகளில் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டு வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

நோய் பாதிப்பு ஏற்படும்
பொதுவாக ஏழரை நாட்டு சனி காலத்தில் அம்மை, பேதி,தலைவலி, கொள்ளை நோய்களால் பெரும் பொருட்சேதம் ஏற்படும். குடும்பத்தில் பொருள், பணம் களவு போகும். இக்கால கட்டத்தில் பல பேருக்கு கொடியவனாக தெரிவான் என புலிப்பாணி சித்தர் கூறியுள்ளார். சனிபகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் வரும் போது அது ஏழரை சனியாகவே இருந்தாலும் அந்த ஜாதகருக்கு மேம்பாடான வாழ்க்கையும் சௌபாக்கியமும் உண்டாகும். அந்த ஜாதகர் நினைத்த காரியம் நிறைவேறும். பெண்களால் தனலாபமும் உண்டாகும். இத்தனை பலன்கள் ஏற்பட்டாலும் லக்கினாதிபதி நிலை, தசாபுத்தி படிதான் அதற்கேற்பவே பலன் நடைபெறும்.

மகர ராசிக்கு பாதசனி
மகர ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து பேசவும். பாத சனி நடக்கும்போது கவனம் தேவை. பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

சுப காரியங்கள் நடைபெறும்
சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் வரும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போரட வேண்டி வரும். சனிபகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் உயர் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

பரிகாரம் என்ன?
ஜென்ம சனியால் இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வு இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள் மனதில் நிம்மதியும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications