வெள்ளி கொலுசு மணி.. புத்தாண்டில் மகாலட்சுமியின் அருள் கிடைக்க.. மனைவிக்கு இதை செய்ய மறக்காதீங்க
சென்னை: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க கணவனோ மனைவியோ சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுப்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமாக உள்ளது. அந்த சர்ப்ரைஸ் அவசியமானதாக இருந்தால் அதுவே யோகமாக மாறி நிறைய பண வரவை தரும். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் யோகத்தை கொடுக்கும். அந்த கிரக சேர்க்கை இல்லாதவர்கள் மனைவிக்கு தரும் ஒரு மிகச்சிறந்த பரிசு மூலம் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை பெற முடியும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இப்போது கோச்சாரபடி மகர ராசியில் சனியும் சுக்கிரனும் சேர்ந்துள்ளனர். இது மகாலட்சுமி யோகம் தரும் அமைப்பாகும். அதே போல புத்தாண்டிலும் கும்ப ராசியில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து பயணம் செய்வார்கள். ஜாதகத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை இல்லாவிட்டாலும் ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஒரு பரிசு பொருளை வாங்கிக் கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர். இப்போது மகர ராசியில் சுக்கிரன் சனியுடன் இணைந்து பயணம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரப்போகிறது.

மேஷ ராசிக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதியான சுக்கிரன், தற்போது ராசிக்கு 10ம் வீடான கர்ம, தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனியுடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்கிறார். புத்தாண்டில் இந்த கிரக சேர்க்கை லாப ஸ்தானத்திற்கு மாறப்போகிறது. இந்த சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோக பலன்கள் தரப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சுக்கிரன் சனி கூட்டணி வெற்றியைத் தேடித்தரப்போகிறது. பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராசி அதிபதியான சுக்கிரன், சனியோடு சேர்ந்திருக்கிறார். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தான அதிபதியும் ஆவார். சனி சுக்கிரன் கூட்டணி வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தை தரப்போகிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீக பயணம் செய்யக்கூடிய யோகத்தையும் தேடி தரப்போகிறது. புத்தாண்டிலும் இந்த கிரகங்களின் கூட்டணி தொழில் ஸ்தானத்திற்கு மாறப்போவதால் யோகங்கள் தேடி வரப்போகிறது. புதிய வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கப்போகிறது.
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சனி கூட்டணி இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இணைந்துள்ளதால் குடும்பம் குதூகலமாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடக்கப்போகிறது. நிறைய பண வரவு வந்தாலும் அதை தேவையில்லாமல் செலவு செய்து விடாதீர்கள். கொஞ்சம் சேமித்து பழகுங்கள். புதிய முயற்சிகளுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையப்போகிறது.
மீன ராசிக்காரர்களுக்கு லாப கரமான ஆண்டாக அமையப்போகிறது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இது அற்புதமான ஆண்டாகும். செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும். உங்களின் திறமை வெளிப்படும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். நல்ல வேலையும் கிடைக்கும்.
சனி சுக்கிரன் சேர்க்கை கொண்ட பெண் கிடைத்தால் அந்த ஆணுக்கு யோகங்கள் தேடி வரும். இந்த சேர்க்கை கொண்ட பெண் ஜாதகியை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஜோதிடர் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். பொதுவாக பெண் ஜாதகத்தில் கேது தொடர்பின்றி சனி சுக்கிரனுடன் ஜாதகத்தில் சேர்ந்தால், அந்த பெண் ஜாதகர் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். அந்த பெண் ஜாதகரை திருமணம் செய்யும் ஆண்களுக்கு நல்ல பணப்புழக்கம், சொத்து சேர்க்கை மற்றும் அதிர்ஷ்டம் இருக்கும். இந்த அமைப்பை பெண்களின் வாழ்வியலில் உருவாக்க, சனி குறிக்கும் பகுதியான கணுக்காலில் சுக்கிரனின் அம்சமான கொலுசை அணிய சொல்லி இருக்கின்றனர். அந்த வெள்ளி கொலுசு என்பது சுக்கிரனின் அம்சம் ஆகும். ஆகவே மனைவிக்கு வருடத்தில் ஒரு முறை வெள்ளியில் கொலுசு அணிவித்தல், சனி சுக்கிர சேர்க்கை உருவாக்கி தரும். நீண்ட நகம் வளர்த்தல் இங்கே கேது தொடர்பு ஏற்படுத்தி தரும். ஆகவே அழகிய கொலுசை அணியும் பெண்கள் கால் விரலில் நீண்ட நகங்கள் இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். என்ன வாசகர்களே புத்தாண்டில் உங்கள் மனைவிக்கு வெள்ளிக்கொலுசு வாங்கித்தர மறக்காதீர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications