For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வளம் தரும் வைகாசி புதன்கிழமை பிரதோஷம் - இந்த ராசிக்காரங்க விரதம் இருக்கணும்

இன்று புதன்கிழமை பிரதோஷம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் கிடைக்கும். ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள் மாலை நேரத்தில் பிரதோஷ வேளையில் விரதம் இருங்கள் வெற்றிகள் தேடி வரும் செல்வ வ

Google Oneindia Tamil News

சென்னை: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். இன்று வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் புதன்கிழமையில் வந்திருப்பது சிறப்பு. திரயோதசி திதி சூன்யம் உள்ள ராசிக்காரர்களான ரிஷபம், சிம்மம் ராசிக்காரர்கள் அவசியம் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும்.

சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம் ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் வருகின்றன. இன்று சுக்ல பட்ச பிரதோஷம். வளர்பிறை பிரதோஷம் புதன்கிழமை நாளில் வருவது சிறப்பு வாய்ந்தது. புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.

செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.

நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு "குட்டி"களின் கதை..!

பிரதோஷ விரத மகிமை

பிரதோஷ விரத மகிமை

ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் என்றும், புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.

சகல ஐஸ்வர்யங்களும் வரும்

சகல ஐஸ்வர்யங்களும் வரும்

செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.

சிவ ஆலய வழிபாடு

சிவ ஆலய வழிபாடு

பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகளும் நீங்கும்.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு

இன்று கோவில்களில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். இப்போது கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளதால் பிரதோஷ விரதம் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சிவனை வழிபட்டு ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.

அருகம்புல் மாலை

அருகம்புல் மாலை

சிவ பெருமானையும், நந்தி பகவானையும் நினைத்து வணங்கி நான் புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். மாலை 4 மணியளவில் வீட்டில் சிவபெருமானை நினைத்து அருகம்புல் பறித்து நந்தியம்பெருமான், சிவனுக்கு அணிவிக்க வேண்டும்.

பிரதோஷ விரதம் அவசியம்

பிரதோஷ விரதம் அவசியம்

பொதுவாகவே பிரதோஷ விரதம் அனைவருமே இருக்கலாம். குறிப்பாக திரயோதசி திதி சூன்யம் உள்ள ராசிக்காரர்களான ரிஷபம், சிம்மம் ராசிக்காரர்கள் அவசியம் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் நினைத்து வணங்கி வர பாதிப்புகள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

English summary
Pradosham’s numerous benefits can be enjoyed regardless of the day it falls on Wednesday budha Vaara Pradosh helps immensely in enhancing knowledge and education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X