Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வ வளம் தரும் வரலட்சுமி போற்றி - கனகதார ஸ்தோத்திரம் துதித்தால் ஐஸ்வர்யம் பெருகும்

வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிட்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேட்ட வரம் தரும் வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளை அலங்கரித்து அன்னையை வழிபட்டு வருகின்றனர். வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

லட்சுமி தேவியின் ஆசி வேண்டி வரலட்சுமி விரத நாளில் "ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மிபாயோ நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்

Varalakshmi Nonbu 2021: Varalakshmi 108 mantras for luck wealth and Prosperity

வரலட்சுமி பூஜை முகூர்த்த நேரம்

விருச்சிக லக்ன பூஜைமுகூர்த்தம் - பிற்பகல் 12:44 முதல் 03:00 மணிவரை பூஜை செய்யலாம். கும்ப லக்ன பூஜை முகூர்த்தம் - மாலை 06:52 முதல் 08:25 வரை பூஜை செய்யலாம்.

1. ஓம் அகில லட்சுமியே போற்றி
2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
5. ஓம் அமர லட்சுமியே போற்றி
6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி
10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
16. ஓம் இதய லட்சுமியே போற்றி
17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
18. ஓம் உதய லட்சுமியே போற்றி
19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி
21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
24. ஓம் கருணா லட்சுமியே போற்றி
25. ஓம் கனக லட்சுமியே போற்றி
26. ஓம் கபில லட்சுமியே போற்றி
27. ஓம் கமல லட்சுமியே போற்றி
28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி
29. ஓம் கஜ லட்சுமியே போற்றி
30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
32. ஓம் குண லட்சுமியே போற்றி
33. ஓம் குரு லட்சுமியே போற்றி
34. ஓம் கோமள லட்சுமியே போற்றி
35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
41. ஓம் சகல லட்சுமியே போற்றி
42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
45. ஓம் சீதா லட்சுமியே போற்றி
46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி
47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
49. ஓம் சுப லட்சுமியே போற்றி
50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி
51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
54. ஓம் தயா லட்சுமியே போற்றி
55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
56. ஓம் தன லட்சுமியே போற்றி
57. ஓம் தவ லட்சுமியே போற்றி
58. ஓம் தான லட்சுமியே போற்றி
59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
62. ஓம் தீப லட்சுமியே போற்றி
63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
65. ஓம் நாக லட்சுமியே போற்றி
66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி
67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
68. ஓம் நீல லட்சுமியே போற்றி
69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
70. ஓம் பவள லட்சுமியே போற்றி
71. ஓம் பக்த லட்சுமியே போற்றி
72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி
73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
77. ஓம் பால லட்சுமியே போற்றி
78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
79. ஓம் புவன லட்சுமியே போற்றி
80. ஓம் புனித லட்சுமியே போற்றி
81. ஓம் பொன் லட்சுமியே போற்றி
82. ஓம் போக லட்சுமியே போற்றி
83. ஓம் மகா லட்சுமியே போற்றி
84. ஓம் மதன லட்சுமியே போற்றி
85. ஓம் மதுர லட்சுமியே போற்றி
86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி
87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
88. ஓம் மகா லட்சுமியே போற்றி
89. ஓம் மகுட லட்சுமியே போற்றி
90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
92. ஓம் மாதா லட்சுமியே போற்றி
93. ஓம் முத்து லட்சுமியே போற்றி
94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
95. ஓம் யோக லட்சுமியே போற்றி
96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
97. ஓம் ராம லட்சுமியே போற்றி
98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
99. ஓம் வரலட்சுமியே போற்றி
100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி
101. ஓம் விஜய லட்சுமியே போற்றி
102. ஓம் விமல லட்சுமியே போற்றி
103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
104. ஓம் வீர லட்சுமியே போற்றி
105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
106. ஓம் வேணு லட்சுமியே போற்றி
107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

Varalakshmi Nonbu 2021: Varalakshmi 108 mantras for luck wealth and Prosperity

வரலட்சுமியை பூஜை செய்து இந்த 108 மந்திரத்தை படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம் இன்றைய தினம் பாடி வரலட்சுமியை வணங்கலாம். ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் சமஸ்கிருத பாடல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது

மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற
பொன்னிறக் கருவண்டுபோல்
மாதவன் மார்பினில் வாசம்பு ரிந்தங்கு
மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்
பரவும்பல் வடிவத்தின் செல்வவள மாகிடும்
திருமகளின் அழகுவிழிகள்
பரிவோடு தந்தஇரு விழிகளின் கடைநோக்கு
மங்களமெ னக்கருள்கவே

நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து
உலவிடும் பெண்வண்டுபோல்
நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற
ஆசையால் மேல்சுழன்று
கோலங்கண் டுஉடன் நாணமேற மீண்டும்
கீழ்வந்து மேல்சென்றிடும்
குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில்
செல்வமெல் லாம்தருகவே

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய
முகுந்தனைக் காணும்விழிகள்
ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது
இனிமையை வார்க்கும்விழிகள்
மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்
பள்ளிகொள் ளும்பரமனின்
மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்
செல்வசுகம் யாவுமருள்க

எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப
மார்பினில் வாழ்கின்றதோ
எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச்
சரமாய் ஒளிர்கின்றதோ
எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின்
தேவைகளைத் தருகின்றதோ
அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள்
மங்களமெ னக்கருள்கவே

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும்
விஷ்ணுவின் திருமார்பினில்
நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலா கிஅகில
உலகுக்கும் தாயுமாகி
பார்கவ குலத்தினில் அவதரித் துபூஜை
செய்வதற் குரியதாகி
பரிமளிக் கும்வடிவம் எதுவோஅது என்னில்
மங்களம் பொழியட்டுமே

மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட
மாயன்வை குந்தன்நெஞ்சில்
மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை
மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்
மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த
கடல்குமரித் திருவின்பார்வை
புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை
என்னையும் அருளட்டுமே

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்
வேடிக்கையாய்க் கொடுக்கும்
முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும்
ஆனந்தம் தந்துநிற்கும்
நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்
நளினமாய்த் தோன்றிநிற்கும்
நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது
கணமேனும் பொழியட்டுமே

Varalakshmi Nonbu 2021: Varalakshmi 108 mantras for luck wealth and Prosperity

மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச்
செய்கின்ற தகுதிஇல்லா
மனிதருக் குங்கூட எந்தகரு ணைப்பார்வை
சொர்க்கத்தைத் தருகின்றதோ
அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை
மலர்மீது வீற்றிருக்கும்
அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு
தேவைகளை அருளட்டுமே

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக்
கூட்டியே வந்துநிற்கும்
திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட
கரியமா வண்ணமேகம்
ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக்
குஞ்சுகளாம் எங்களுக்கு
செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி
வளமெலாம் அருளட்டுமே

கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
நாயகியே போற்றிபோற்றி

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
வேதவடி வினளேபோற்றி
நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
ரதிதேவி போற்றிபோற்றி
எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில்
அமரும்மலர் மகளேபோற்றி
எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ
உத்தமனின் துணையேபோற்றி

செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட
திருமகளே போற்றிபோற்றி
மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய
மாமகளே போற்றிபோற்றி
சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன்
பிறந்தவளே போற்றிபோற்றி
நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே
நிலமகளே போற்றிபோற்றி
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே

தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும்
செந்திருவே போற்றிபோற்றி
தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற
நாயகியே போற்றிபோற்றி
தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும்
செல்வமே போற்றிபோற்றி
சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின்
இல்லறமே போற்றிபோற்றி

ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே
தேவியே போற்றிபோற்றி
திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
திருமகளே போற்றிபோற்றி
கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே
லக்ஷ்மியே போற்றிபோற்றி
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா
மோதரனின் துணையேபோற்றி

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும்
கொண்டவளே போற்றிபோற்றி
உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல
நாயகியே போற்றிபோற்றி
அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும்
அலைமகளே போற்றிபோற்றி
நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின்
நாயகியே போற்றிபோற்றி

செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்
பெற்றிடச் செய்யும்தாயே
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்
தருகின்ற கமலநயனீ
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்
அஞ்ஞானம் நீக்குபவளே
செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
என்னையே என்றுங்காப்பாய்

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று
செல்வங்கள் யாவற்றையும்
முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய
கடைக்கண்ணின் கருணைநோக்கு
அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும்
திருமகளே உனதுநோக்கு
உன்னைஎன் மனதாலும் மெய்யாலும் சொல்லாலும்
துதிசெய்து புகழ்கிறேன்நான்

பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக்
கையேந்தும் பதுமநிதியே
புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன்
ஒளிர்கின்ற செல்வச்சுடரே
பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே
நெஞ்சமெல் லாம்அறிந்தோய்
ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே
என்னிடம் கருணைகாட்டு

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தேவகங் கைநதியின் தெளிவான தூயநல்
நீரினைப் பொற்குடத்தில்
திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத்
திகழ்கின்ற தெய்வஅழகே
தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம்
யாவிற்குமே அன்னையே
தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே
காலைஉனைத் துதிசெய்கிறேன்

அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின்
ஆனந்த காதலிநீ
ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில்
முதல்வனாய் நிற்பவன்நான்
அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக் கண்களின்
பார்வைக்கு ஏங்கிநிற்கும்
அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும்
என்னைநீ காணவேண்டும்

கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகி னிற்குந்தாயாம்
மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்
நிதம்புகழும் மனிதர்எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்
செல்வமெல் லாம்பெறுகிறார்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர
பாக்கியம் பலபெறுகிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+