Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சதுர்த்தி விழா..நாடு முழுவதும் நாளை கொண்டாட்டம்..களைகட்டும் விற்பனை..குவிந்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவது கொண்டாடப்படவுள்ளது. சந்தைகளில் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. ஏராளமான மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கவும் பூக்கள், பழங்களை வாங்கவும் சந்தைகளில் குவிந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 800க்கும், முல்லை கிலோ ரூ. 500க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150க்கும், ரோஜா கிலோ ரூ. 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் குறைவாக பூக்களை வாங்கி செல்கின்றனர்.

ஓணம் பண்டிகையும் தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று பூக்கள் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.
வழக்கம் போல் சிவன் மற்றும் விஷ்ணு வடிவில் பிள்ளையார், சக்தியுடன் பிள்ளையார், சித்தி மற்றும் புத்தியுடன் பிள்ளையார், மலேசியா முருகன் வடிவிலான பிள்ளையார், யானை மீது பிள்ளையார், புலிகள் மீது பிள்ளையார், கருடன் மற்றும் மயில் மீது பிள்ளையார், சிக்ஸ் பேக் பிள்ளையார் என பல்வேறு வடிவிலான பிள்ளையார் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபட தயார் நிலையில் உள்ளன.பிள்ளையாரும், முருகரும் செஸ் விளையாடுவது போன்ற சிலைகளும் புதுவரவு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்தும், இந்து இயக்கங்கள் சாலைகள் மற்றும் தெரு சந்திப்பு பகுதிகளில் பல அடி உயரம் கொண்ட சிலைகள் வைத்து வழிபட்டு பின்னர் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் சிலைகளை கரைத்து வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அங்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டாட்டம் நடைபெறும்.

20000 போலீஸ் பாதுகாப்பு

20000 போலீஸ் பாதுகாப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020, 21 ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு சென்னையில் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கால கட்டுப்பாடுகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை முழுவதும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

 சென்னையில் 5500 சிலைகள்

சென்னையில் 5500 சிலைகள்

சென்னை முழுவதும் 5500 க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபட உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால், காவல்துறை அதிகாரிகள் முறையான அனுமதி பெற்று அதன் பின்பு சிலைகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தற்போது வரை 2,400 க்கும் மேற்பட்ட சிலை வைத்தல் தொடர்பான மனுக்கள் வந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை நாளை மாலைக்குள் 5000 ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறதோ அவர்கள் மட்டுமே சிலை வைக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சென்னையில் பதட்டமான பகுதிகளான புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

விநாயகர் விசர்ஜன விழா

விநாயகர் விசர்ஜன விழா

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா அவரவர் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4ஆம் தேதி நடைபெற உள்ளது. விநாயகர் சிலை வைத்து வழிபடுதலுக்குப் பின்பு அவற்றை பாலவாக்கம், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+