தகுதி நீக்கம் செல்லும் என்றாலும் அரசுக்கு ஆபத்து நீடிக்கதான் செய்கிறது.. எப்படி தெரியுமா?
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஒருவேளை இவர்கள் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு அளித்து இருந்தால், அரசுக்கு போதிய பெரும்பான்மை இருக்காது என்ற காரணத்தினால் அரசுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு சூழல் இருந்து வந்தது.
ஆனால், இந்த தீர்ப்பு காரணமாக அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற நிலை உருவாகியுள்ளதால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரு வாய்ப்புகள்
அதேநேரம் அரசுக்கு முழுமையாக ஆபத்து நீங்கி விட்டதா, என்று கேட்டால், இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனெனில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இருப்பது இரு வாய்ப்புகள்தான். ஒன்று, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்ய வேண்டும், மற்றொன்று, இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும்.

கால தாமதம்
இதில் இரண்டாவது வாய்ப்பைத்தான் 18 பேரும் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்று தினகரன் தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு முழுமையான தீர்ப்பை இன்றுதான் பெற்றுள்ளது. உச்சநீதிமன்றம் சென்றாலும் கால தாமதம் ஏற்படும் என்பதால் தங்களது பதவிக்காலம் வீணாகி விடும் என்ற அச்சம் 18 பேருக்கும் உள்ளது.

தேர்தல் களம்
எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து இந்த 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பமாக இருக்கும். அங்குதான் அரசுக்கு ஒரு சிக்கல் வருகிறது. தேர்தல் களத்தில் அதிமுகவைவிட தினகரன் அணியினர்தான், மிகுந்த சுறுசுறுப்பாகவும், லாவகமாகவும் செயல்படுகிறார்கள்.

தேர்தலில் வெற்றி யாருக்கு
இதை ஆர் கே நகரில் அதிமுகவினர் உணர்ந்தனர். 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றால் அதில் பெரும்பாலான தொகுதிகளில் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது, திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கிறது. எனவே தேர்தல் நடைபெற்று மீண்டும் எம்எல்ஏக்கள் ஆக அவர்களே வந்தாலும், திமுகவினர் வந்தாலும் அப்போதும் பெரும்பான்மையை இழந்து ஆட்சிக்கு ஆபத்து உள்ளது.

இருக்கு, ஆனா இல்லை
ஆனால், இடைத் தேர்தல் நடத்த குறைந்தது ஆறு மாதகாலமாவது தேவைப்படும். அதற்கு மேலும், தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக் கொண்டே செல்லலாம். அரசுக்கு ஆபத்து நீங்கி விட்டது என்று கூறமுடியாவிட்டாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications