ராகுல் கன்னத்தை பிடித்து முத்தம் தந்த பெண்.. தாடையையும் கிள்ளி கொஞ்சினார்.. பிரச்சாரத்தில் கலகலப்பு
மேடையிலேயே ராகுல்காந்திக்கு காங்கிரஸ் பெண் முத்தம் தந்தார்,
காந்திநகர்: பிரச்சார மேடையில் வைத்தே பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் லால்டுங்ரி என்ற பகுதியில் இன்று ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராகுல் காந்தி
அப்போது, மேடையில் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தனர். மக்களிடையே உரையாற்றிவிட்டு, ராகுல் காந்தியும் மேடையில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கன்னத்தில் முத்தம்
சிறிது நேரத்தில் ராகுல்காந்திக்கு மகளிரணி நிர்வாகிகள் சிலர் மாலை அணிவித்தனர். அந்த நேரம் பார்த்து அதிலிருந்த ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். பிறகு அவரது கன்னத்தையும், தாடையையும் கிள்ளி கொஞ்சி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

புன்முறுவல்
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராகுல், என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிஷம் திகைத்து நின்றார். அதனை தொடர்ந்து புன்முறுவலுடனே உட்கார்ந்திருந்தார்.

படுவைரல்
மேடைக்கு வந்த அந்த வயதான பெண் ராகுலுக்கு முத்தமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய இந்த காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications