Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்டிமென்டை உடைத்த திமுக.. வடமாவட்டங்களில் 3 கட்சிகளுக்கு செக்.. கலைந்து போன பாமகவின் கனவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. நேற்று காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

திமுக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக, பாமக, நாம் தமிழர், தேமுதிக என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின்படி 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 136 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 971 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமாவும் முன்னிலை வகிக்கிறது.

தனித்து போட்டி

தனித்து போட்டி

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட வேண்டும் என்று தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் பாமக முடிவு எடுத்தது.அதிமுக தலைமை சரியில்லை. கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தவில்லை. சரியான தலைமைப்பண்பு இல்லை. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். பாமகவின் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று விமர்சனம் வைத்துவிட்டு பாமக அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது.

பாமக

பாமக

பாமக கிட்டத்தட்ட ராஜதந்திரமாக செயல்பட்டுதான் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. அதன்படி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்கள் வட மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் எல்லாமே பாமக வலுவாக இருப்பதாக கருதப்படும் மாவட்டங்கள். அதிலும் கள்ளக்குறிச்சி எல்லாம் பாமக பாரம்பரியமாக வலுவாக இருக்கும் மாவட்டங்கள்.

பாமக வன்னியர்

பாமக வன்னியர்

இதனால்தான் பாமக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. ஆனால் கள்ளக்குறிச்சி உட்பட ஒரு மாவட்டத்தில் கூட பாமகவின் மாவட்ட கவுன்சில் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. 9 மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை கூட பாமக பெறவில்லை. பாமக தான் எதிர்பார்த்த வன்னியர் வாக்குகளும் பாமகவிற்கு கிடைக்கவில்லை. உள்ளூரில் பாமக செல்வாக்கை இழந்துள்ளது.

பாமக தோல்வி

பாமக தோல்வி

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பாமக 35 இடங்கள் வர வென்றுள்ளது. ஆனாலும் எந்த மாவட்டத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மொத்தமாக பாமக ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பெறவில்லை. இதே வட மாவட்டங்களில்தான் தற்போது மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக அள்ளி இருக்கிறது. அதாவது பாமக வலுவான கட்சியாக இருக்கும் என்று கருதப்பட்ட அதே வடமாவட்டங்களில் திமுக எழுச்சி பெற்றுள்ளது.

முன்னிலை

முன்னிலை

காஞ்சிபுரத்தில் 11 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. வேலூரில் உள்ள அனைத்து 14 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. திருப்பத்தூரில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. ராணிப்பேட்டையில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. பாமக வலுவாக இருக்கும் என்று கருதப்பட்ட கள்ளக்குறிச்சியில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 13ல் திமுக, 1ல் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

பாமக

பாமக

வன்னியர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களிலும் மற்ற வட மாவட்டங்களிலும் திமுக புதிய எழுச்சி பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் திமுக வெற்றிபெற முடியாது. அது பாமக, அதிமுக கோட்டை என்று சென்டிமென்டை உடைத்து திமுக இங்கே வெற்றிவாகையை சூடி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அதிமுக, தேமுதிகவும் இங்கு படுதோல்வியை அடைந்துள்ளது.

அதிமுக

அதிமுக

வன்னியர்களுக்கு 10 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்த கட்சி என்ற வகையிலும், ஜாதி வாக்குகள் காரணமாகவும் அதிமுக இங்கு கணிசமான இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டில் 1, விழுப்புரத்தில் 1 என்று இரண்டு மாவட்ட கவுன்சிலர் இடங்களை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒன்றில் கூட அதிமுக மாவட்ட கவுன்சிலர் பதவிகளை வெல்ல முடியவில்லை.

 தேமுதிக

தேமுதிக

அதேபோல் ஜாதி ரீதியான வாக்கு வங்கி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தேமுதிகவும் வலுவான கட்சியாக பார்க்கப்பட்டது. அந்த கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கி இங்கிருந்துதான் வரும். ஆனால் தேமுதிகவும் இங்கு தோல்வியை தழுவி உள்ளது. ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் தேமுதிக பெற முடியவில்லை. ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை மட்டுமே தேமுதிக பெற்றுள்ளது.

வெற்றி

வெற்றி

இதற்கு முன்பெல்லாம் வடமாவட்டங்களில் பெரிதாக வெற்றியை பெறாமல் இருந்த திமுக கடந்த லோக்சபா தேர்தலில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இங்கே முன்னேற்றம் அடைந்து வருகிறது. சட்டசபை தேர்தலிலும் வட மாவட்டங்களில் திமுக கொஞ்சம் நன்றாகவே செயல்பட்டு இருந்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக கிளீன் ஸ்வீப் செய்து வெற்றிபெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+