உத்தரகாண்ட்டில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம்..தலைநகர் டெல்லியில் அதிர்ந்த கட்டிடங்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர். அங்கு 20 நாட்களுக்கும் மேலாக மீட்புக்கணி நீடித்தது. உணவு, மருத்துவ உதவி பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து துருக்கி, சிரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களிலும் நில நடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்தியாவிலும் நிலநடுக்க சாத்தியங்கள் தொடர்பான ஆய்வுகளும் அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக இமயமலை பகுதியான உத்தரகாண்ட் மிகப் பெரும் நிலநடுக்க பேரழிவை சந்திக்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமானவை கண்டத் தட்டுகள் நகருதல்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது என்று தனது ஆய்வு கட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முதலே நாட்டின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து அச்சத்துடன் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறியடித்து வீதிகளுக்கு ஓடிய மக்கள்! வீடியோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications