Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவாவிற்கு தெரிய வந்த மூர்த்தி செயல்.. பிரச்சனையை பெரிது பண்ணும் ஜனார்த்தனன்.. திட்டும் முல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் ஜீவாவிற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மூர்த்தி சொன்ன விஷயம் ஜீவாவிற்கு தெரிய வருகிறது.

முல்லையை தனிக்குடித்தனம் போக சொல்லி அவருடைய அக்கா மல்லி அட்வைஸ் செய்கிறார்.

கயலுக்காக தனம் குடும்பத்தோடு பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

கயல் பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சு

கயல் பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 3ஆம் தேதிக் காண எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜீவாவும் மீனாவும் கயலை பிளே ஸ்கூலில் சேர்ப்பதற்காக கூட்டிக்கொண்டு செல்கின்றனர். அங்கே கயலை சேர்ப்பதும் ஜீவா கயலை பிரிய மனமில்லாமல் இருக்க, மீனா ஒரு மாதிரியாக ஜீவாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின்னர் ரோட்டில் முல்லையும் தனமும் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லையின் அக்கா மல்லி அங்கே வருகிறார்.

குடும்பத்தை பிரிக்க பார்க்கும் மல்லி

குடும்பத்தை பிரிக்க பார்க்கும் மல்லி

மல்லி தனம் மற்றும் முல்லை இருவரிடமும் நலம் விசாரித்து விட்டு மீனாவை போய் பார்த்த விஷயத்தை கூறி கயலகயலை ஸ்கூலில் சேர்த்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய முடியாது என்று சொன்னதை மீனாவின் அப்பா செய்து கொடுத்து இருக்கிறார். அங்கு மீனாவையும் ஜீவாவையும் தாங்கு தாங்கு என்று தாங்குறாங்க. ஜீவா அங்க சந்தோஷமாகத்தான் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பின்னர் மல்லி முல்லையிடம் நீயும் கதிரை கூட்டிக்கொண்டு தனியாக போக வேண்டியது தானே என்று அட்வைஸ் கொடுக்க, அதற்கு முல்லை நல்ல வேலை இது அக்கா முன்னாடி சொல்லல இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்காத என்று திட்டி விட்டு செல்கிறார்.

ஜீவாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

ஜீவாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

ஜீவா தன்னுடைய மாமனாரோடு காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்தப் பக்கமாக ஒரு கஸ்டமர் ஒருவர் வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரிடம் நீங்க கடைக்கு ஆயிரம் ஐந்தாயிரம் ரூபாய் தரணும் அதை அண்ணன் கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல, அவர் நீ ஏன் பணத்தைப் பற்றி பேசுற. அதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என்று மூர்த்தி போன் பண்ணி சொல்லிவிட்டார் என்று சொல்ல, ஜீவா அதிர்ச்சி அடைகிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அப்பாவும் இதுதான் சந்தர்ப்பம் என்று மூர்த்தி இப்படி எல்லாம் சொல்லி இருக்கிறார் பாருங்கள். அப்போ எப்போ நீங்க அந்த கடையை விட்டு வருவீங்க முழு கடையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று ஏத்தி விடுகிறார்.

கயலுக்காக சேமிப்பு

கயலுக்காக சேமிப்பு

தொடர்ந்து கதிர், முல்லை, மூர்த்தி என அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். அப்போது தனம் தான் பணம் சேர்த்து வைத்த குடம் நிறைந்துவிட்டது என்று சொல்ல மூர்த்தி இந்த பணத்தை பேங்கில் போட்டு விடுமாறு சொல்கிறார். இந்த பணம் கயலின் திருமண செலவுக்கு என்று நாம் சேர்த்து வைத்தது. ஒரு வருடத்திற்குள் நிறைந்து விட்டது. தினமும் 200 ரூபாய் எந்த கஷ்டம் வந்தாலும் எடுத்து வைத்து விட சொல்லி நீங்க சொன்னது இப்போ நல்லதாக தான் இருக்கிறது. ஒரு வருடத்திற்குள் ஒரு குடம் நிறைந்து விட்டால் 20 வருடத்திற்கு 20 குடம் நிறைந்து விடும் என்று தனம் பேசிக் கொண்டிருக்க, அனைவரும் கடைசியில் ஜீவா நம்மோடு இல்லையே, கயிலை பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். பிறகு எல்லோரும் சீக்கிரமாக சேர்ந்து விடுவோம் என்று கதிர் ஆறுதல் படுத்துகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+