• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 5... "சுகர் கியூப்ஸ் "!

|

- விஜயா கிப்ட்சன்

"வர வர ரெம்ம்ம்ம்ப சாஸ்தியாதான் போவுது - குட் மார்னிங் மெசேஜ் ஐ சொன்னேன்...

வாட்ஸாப்ப்ப தொறந்தோன்ன "இனிய காலை வணக்கம் எழுத்தாளரே ...

"ஹாப்பி மார்னிங்--ஹவ் எ கிரேட் வீக் அ ஹெட்!"

" நமக்கம்--செவ்வாய் கிழமை வாழ்த்துக்கள்" ,

"வணக்கமுங்கோ ..வாழ்க வளமுடன் ! "

Sillunnu Oru Anubavam Sugarcubes whatsapp status written by Vijaya Giftson

"சிரிச்சுப் பாருங்க உங்க மொகரக்கட்டயை உங்களுக்கே புடிக்கும்

-சிரிக்க வைத்துப் பாருங்கள் உங்க முகம் எல்லாருக்கும் புடிக்கும் ...

இனிய புதன் காலை வணக்கம்!" ..

"நினைத்தது நடக்கும் ,எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு துணையாய் இருப்பேன் ..ஓம் சாய் ராம் --பாபா அருள் புரிவார்"..-இது பெரும்பாலும் வியாழன்

"எப்போதும் இறைவனை நினையுங்கள்" ...இனிய வெள்ளி!

"எதுவும் சில காலம் தான் ..எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டால் வாழ்க்கை இன்பமே .ஹாப்பி வீக்கெண்ட் ..இது சனிக்கிழமை !

"உப்பு உணவை சுவையாக்கும் ...நட்பு வாழ்க்கையை சுவையாக்கும் --பை தி வே நமக்கு சோறு தான் முக்கியம்!" --ஞாயிறு விடியல் வணக்கம் ....

இது எல்லாத்துக்கும் குட் மார்னிங் சொல்லி முடிக்கவே குட் அப்டர்னூன் ஆயிருது போங்க ...

அம்புட்டு பாசமா ஸ்வீட் ஹார்ட்ஸ் அனுப்பும் போது பதில் அனுப்பீட்டோம்னா சந்தோசப் படுவாங்களா இல்லையா?!! ...

என்னைக்குமே அதிகமா ஸ்டேட்டஸ் பாக்குற பழக்கமி....ல்லை ...

ஆனா என்னமோ அன்னைக்குதான் ....

ஒரே பர்த்டே போட்டோஸ் , இளையராஜா பாடல்கள் ,மிஸ் யூ மெஸ்ஸேஜெஸ் , எஸ் பி பி லவ் சாங்ஸ் ,

"மாப்ள மாட்டிகிட்டான்-கல்யாணத்து அன்னைக்கே மணப்பெண்ணின் வாயை மூடினார் மாப்பிள்ளை --ன்னு மாஸ்க் போட்டு விடுற மாதிரி புது மணத் தம்பதியர் போட்டோஸ் ,

"ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்" னு வேற எதுலயோ ஒர்க்கவுட் ஆனதுக்கு இந்த டயலாக் வச்சு ஸ்டேட்டஸ் ,

வழக்கம் போல அண்ணன் வடிவேலுவின் மீம்ஸ் !

--நாம என்ன சொல்ல வரோம்னு கூகுள் புரிஞ்சுக்கற அளவுக்கு கூட நம்ம கூட இருக்கவங்க நம்மள புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க!

...அடுத்து பொறந்த நாளுக்கு கோட்டையில் சந்திப்போம்னு சொன்னேங்களே --அது அருப்புக்கோட்டையா -பட்டுக்கோட்டையா ஆண்டவரே? ன்னு தமிழ் கூடம் மீம்ஸ் போட்ருக்காய்ங்க ...

--திடீர்னு பாத்தா ஒரே பிங்க் கலர் ல எல்லாருமே ஒரே மாதிரி ஸ்டேட்டஸ் வச்சிருக்காய்ங்க ...ப....க்...குன்னு ஆயிருச்சு...

உலகத்துல பெருசா ஏதோ நடந்திருக்கு மிஸ் பண்ணிட்டோம்டா மாதவா ...ஆத்தீ ன்னு பர..பரன்னு கை ஸ்க்ரோல் பண்ணுது ...

ஒரு வேளை முதல்வர் எடப்பாடியார் மறுக்கா ஊருக்கு வாராரோ என்னமோ?! ....

இல்ல.....ஆன்லைன் ல அமேசான், பிளிப்கார்ட் , அஜியோ , டாட்டா க்ளிக் னு எதுலயோ கிறிஸ்துமஸ் , நியூ இயர் ஆபரா அள்ளி வீசுறாய்ங்களோ ?!

இல்ல....பிரபலம் யாரும் மண்டைய கிண்டைய போட்டுட்டாங்களா? ....

அமைப்பு சார்ந்த பொதுக்கூட்டம் ஏதும் இருக்குமோ ?! ...வாடிவாசல் மாதிரி இளைஞர்கள் எல்லாரும் ஒண்ணா திரண்டு வாங்கடா ன்னு வச்சிருக்காய்ங்களா ...?!

எந்திரன் 2.0 மாதிரி -அன்லாக் 2.0 வில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள் ,மற்றும் பூங்காக்கள் தொறக்கப் போறாங்களா ?!

20 யத் செஞ்சுரி பாக்ஸ் ஏதோ சில்ட்ரன்ஸ் பிலிம் ரிலீஸ் பண்ணீட்டாய்ங்க போல ஓ டி டி .....ல

போலீஸ் ல ஆள் எடுக்குறாங்களாம் ...ஹோம் காட்ஸ் பயிற்சி விஷயமாவா ?!

ஆனாளப்பட்ட திருநவேலில ஆர் எம் கே வி - போத்திஸ் தவிர மேக்ஸ் , பாண்டலூன்ஸ் , இண்டியன் டெர்ரயின் , கோ கலர்ஸ் , பிக் பஜார் , ரிலையன்ஸ் மால் , பேஸிக்ஸ் , மாதிரி வேற ஷாப்பர்ஸ் ஸ்டாப் ரேஞ்சுக்கு என்னமோ வருது போலயே ....

இல்லேன்னா உங்க கிச்சன் , எங்க கிச்சன் , சித்தி கிச்சன் , ஆச்சி கிச்சன் , நெல்லை சரவண பவா , பஸ் ஸ்டாண்டை இங்கிட்டு மாத்துனோன்ன சேலம் சரவண பவா ,ஜானகி ராம்ஸின் புதிய கிளை ங்கிற மாதிரி --வேற ஹோட்டல் கீட்டல் திறப்பு விழாவா இருக்குமோ ?!

கொஞ்ச நாளா கொரோனா இருக்கா இல்லயானே வந்த அறிகுறி கூட இல்லாம மனுசப்பயலுவ ஊரு சுத்துதானுவளே ...ஒருவேளை வாக்சின் ஏதும் வந்திருச்சோ...

தொடர் மழை அறிவிப்புகள் காரணமா மைசூரு, தூத்துக்குடி, சென்னை ரயிலு வண்டிகள் நேர கால மாற்றமா இருக்குமோ ....

கார்த்தியலுக்கு நெல்லையப்பர் கோயில் முன்னாடி ஏத்தப்போற சொக்கப்பனை போட்டோஸ் ஆ .... ....அதுவும் பிங்க் கலர் ல இருக்க வாய்ப்பில்லையே!

கையும் ஓடல காலும் ஓடல ...

பெரும்பாலும் அவ்ளோவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஸ்டேட்டஸா இருந்தாலும் மொதல்ல கண்ணுல பட்டது நம்ம ஸ்வீட் டார்லிங் பிரெண்டு வச்சிருக்கு ..என்ன னு ஓபன் பண்ணி பாத்திர வேண்டியது தான் ..மேலும் டவுட்டு இருந்தாலும் அவுங்க கிட்டேனா ஒடனே வெக்கமில்லாம கேட்டுரலாமில்ல ....அதான பரென்ஷிப்பு !

பாத்தா...குட்டி பாப்பா வோட கியூட் வாய்ஸ் ல....வயலட் கலர் தொப்பி போட்ட குட்டி அனிமேஷன் சுகர் கியூப் பொம்மை ....

...டனுக்கு ..ரிட்டுக்கு ..ரிட்டுக்கு ...டும் ...டும்..

...டனுக்கு ..ரிட்டுக்கு ..ரிட்டுக்கு ...டும் ...டும்..

...டனுக்கு ..ரிட்டுக்கு ..ரிட்டுக்கு ...டும் ...டும்.

....டனுக்கு ..ரிட்டுக்கு .....

...டனுக்கு ..ரிட்டுக்கு ..

ரிட்டாக்கு

ரிட்டாக்கு

ரிட்டாக்கு

ரிட்டாக்கு

டங்கி டங்கி டங்கி டு.....ம்....ன்னு

அத பாத்தோன அப்டி ஒரு சிப்பு சிப்பா வருது எல்லாருக்கும்....வீட்டோட விழுந்து விழுந்து சிரிக்கிறாய்ங்க ! அப்டி ஒரு ஸ்டேட்டஸ் நமது நாளை அழகாக மாற்றுகிறதா இல்லையா?

அந்த குட்டி பாப்பா எங்க இருக்குனு தெரியல...அவுங்க அம்மா அப்பா யாரோ ... ஒரே நாளில் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் கலக்கிருச்சு ...அதை விட டிச்சுக்கு டிச்சுக்கு னு ஆடி ஆடி வந்த அனிமேஷன் பொம்மை ரொம்ப பொருத்தம் ...

மறுநா காலை ஆகல .. அதே படத்தை ஸ்டேட்டஸா வச்சு "எதுக்காகடா எல்லாரும் இந்த ஸ்டேட்டஸ் வைக்கிறீங்க? ...சொல்லீட்டு வையுங்களா! ..னு மீம்ஸ் ..."

இதுல 90 'ஸ் கிட்ஸ், "அதென்னடா ரிட்டுக்கு டும் டும் ன்னு ..எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம சிங்கிள்ஸ்சாவே இருக்கோம்னு குத்தி காமிக்கிறீங்களா?" ...அப்டின்னு கமெண்ட்ஸ் வேற!

அதற்குப் பிறகு வேற வேற காணொளிகளை இணைத்து இதே பாட்டை நிறைய பேரு வைத்து இன்னும் ரசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ...

சிங்காரவேலன் படத்துல கவுண்டமணி சார் ...ஒரு ஹோட்டலுக்கு போயி காபி ஆர்டர் பண்ணீர்ப்பாரு ..பால் தனியா, சக்கர தனியா , டிக்காஷன் தனியா கொண்டு வந்து டேபிள் ல வச்சுட்டு போவார் வெயிட்டரு .

""டேய் டேய் டே....ய் சொவப்பு சட்ட .. அப்போ சோறு கேட்டா --- அரிசி தனியா , சூடு தண்ணி தனியா கொண்டு வந்து வச்சுட்டு போவீங்க-- நாங்க பொங்கி திங்கணுமா டா? என்னாங்கடா உங்க பைவ் ஸ்டார் ஓட்டலு ?! ம்பாரு ..

பைவ் ஸ்டார் ஹோட்டலில் காபி கோப்பைக்கு பக்கத்தில் வைக்கப்படுகிற சுகர் கியுப்ஸ் மாதிரி ஒரு சந்தோசத்தின் நாள் எதிர்பாராமல் நம் அனைவருக்கும் அமைந்தது ஆனந்தமே !

இந்த வாரம் அனைவருக்கும் இனிப்பான வாரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

-விஜயா கிப்ட்சன்

(thanga.vijaya@gmail.com )

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5]

 
 
 
English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about the Sugarcubes whatsapp status written by Writer Vijaya Giftson.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X