• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 3... "தேநீரில் சிநேகிதம்"!

- விஜயா கிப்ட்சன்

இந்தத் தீவாளி முடிஞ்சது கூட வருத்தமில்லிங்கோ ....ஆனா ஒரு மாசத்துக்கு தீவாளிக்கு சுட்ட முறுக்கு, தேங்குழல சாம்பார் சாதத்துக்கும் , தயிர் சாதத்துக்கும் வச்சு சாப்பிடணுமே னு நினைக்கும் போது இருக்கற வருத்தம் இருக்கே வரு...த்..த்..த..ம் ...

தீபாவளி முடிஞ்சும் கூட இந்த பண்டம் பணியாரம் தின்னு முடியலை.. கொஞ்சம் ஜாஸ்தி தான் ... அதுனால சிம்பிளா சமைச்சுரலாம்னு உளுந்துல உள்ள தொலிய நீக்காம அப்புடியே கழஞ்சு பூண்டும் , சீரகமும், உப்பும் சேர்த்து மணக்க மணக்க உளுந்தம் பருப்பு சோறு பொங்கியாச்சு!

சோடியா தொட்டுக்க எள்ளுத் துவையலத் தவிர வேற காம்பினேஷன் இருக்க முடியுமா?...சுட்ட அப்பளத்தோட சுவையா சாப்ட்டாச்சு...

Sillunnu Oru Anubavam Theneeril Snehitham by Vijaya Giftson

சாப்ட்டு முடிச்ச ஒடனே அப்புடியே லைட்டா கண்ண கட்டும் பாருங்க ...

பட் யு நோ வாட் ?!! அப்புடி ஒடனே தூங்கக்கூடாதாம் ...ஆல் டாக்டர்ஸ் அட்வைஸிங்!

("ஒகே டாக்டருங்க நாங்க தூங்கலிங்க! ....")

சரின்னு ... சன்னலோரமா உக்காந்து கொஞ்ச நேரம் பாட்டு கேப்போம் னு தோணிச்சு ....வெளிய பாத்தா மணி மூணு மாறியெல்லாம் தெரியல ... கார்த்திகை மாசம் தான்... திடீர்னு வானம் மேகமூட்டமா இருக்கு

பின்னாடி தோட்டத்துல குயிலு சத்தம் வேற .... பறவைகளுக்கென வைத்த தானிய தட்டிலும் சாப்பாடு அப்டியே இருக்கு! ..

எங்க போச்சுங்க இந்த காக்கா, அணிலு எல்லாம் ...ஆள காணோமே னு தேடிகிட்டே எப் .எம் ஆன் பண்ணுறேன் ....

"மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே ..

மனம் இங்கு நனையுதே ...இது என்ன காதலா சாதலா .."

என்று நித்யா மேனனும் , நானியும் மனதுக்குள் வந்து போகிறார்கள் ...

ஆஹா ரெம்ப டைமிங்கா இருக்கே..னு நினைக்கறதுக்குள்ள மூக்க தொளச்சுக்கிட்டு மயக்குற மண் வாசனை .... இத விட பகல்ல அடிக்கிற பெர்ஃப்யூம் என்ன பெருசா ?!

எம்புட்டு நாளாச்சு ...மழை பேஞ்சா வர்ற மண் வாசனையும் , மழையில முழுசா நனஞ்சு ஆட்டம் போட்ட அந்த பால்ய கால வாழ்க்கையும் ---திரும்ப கிடைக்குமா ?!

அப்பல்லாம் வீட்டுக்குள்ள ஓடிப்போயி ஆளாளுக்கு ஒரு பேப்பர் ல கப்பல், கத்தி கப்பல் எல்லாம் செஞ்சு ஓடுற தண்ணியில விட்டுட்டு பாத்துட்டே இருப்போம்ல-

"....ஹாய் ....ய் எங்கப்பல் மட்டும் மூழ்கலயே !" னு போட்டி வேற..

இன்னிக்கு குழந்தைகள் கேட்டாலும் நாம அவங்கள மழையில நனைய விடுறது இல்ல...

அடுத்த பாட்டு ...

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய் ..

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேரன்பிலே !'

யேசுதாஸ் நனைய வைக்கிறாருய்யா ...

அதுக்குள்ள தட தட ன்னு ஆரம்பிச்சுருச்சு மழை ...

நிலமெல்லாம் நீரு ...மரமெல்லாம் செழுமை ...

அது என்னமோ" காத்திருந்து காத்திருந்து தன் காதலனைக் கண்டவுடன் கன்னங்கள் சிவக்க ஒரு மெல்லிய புன்னகையோட முகமெல்லாம் மலருமே அவளுக்கு-- அது மாதிரி !"

இந்த மழைத் தண்ணி பட்டோன்ன மரத்துக்கெல்லாம் வருதே ஒரு ப....ச்...சை வெக்கம் ..அடடா .. அழகு!

"இப்போ இன்னும் வலிமையா , ரொம்ப ஜோரா தட ...தட ..தட" ...ன்னு கொட்ட ஆரம்பிச்ருச்சு ...

காரு பைக்கெல்லாம் ஊர்ந்து ஊர்ந்து தான் போவுது ...

மழைக்காக மனுசன் வேலையே செய்யாம இருக்க முடியுமா?...

அதையும் தான பாக்கணும் ...

ரோட்டுல போற பைக்கு காரங்க எல்லாம் ஜெர்க்கின், ரெயின் கோட் வேற போட்ருக்காங்க ....

பரவாயில்லையே "நம்மூரு ரெம்ப டெவெலப்ட் யா!" ன்னு மனசுல நினைச்சுக்கிட்டேன் ...

அடுத்து எப். எம் ல ,

"மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா

சாரல் விழும் நே....ர...ம் தேவ மயக்கம்! ...."

இதெல்லாம் பல பேரு கேக்காத பாட்டு .. ஒரு வித ரொமான்டிக் சாங் தான் ..அதுவும் ...

ச்ச மனுசன் என்னமா பாடிருக்காருய்யா ... னு முன்னாடி நினச்சாலும் ..அவரு போன பிறகு அவர் பாடல்களை கேக்கும் போது மனசு என்னமோ தான் பண்ணுது ...எஸ் பி பி சார் .. வி ஆல் மிஸ் யூ !!

சரி பாட்டு , மழை -- மழைப்--பாட்டு , ஜன்னலோரம் அப்போ கண்டிப்பா அடுத்து சூடா கையில ஒரு கப் காபி வேணுமா இல்லையா? ..அதையும் ஏன் விட்டு வைப்பானேன் ...போய் போட்டுட்டு வந்து பாட்டு கேப்போம்

னு எந்துருச்சேன் இப்டி நினைக்கறதுக்குள்ள அப்டி பிளாஸ்க் நெறைய காபியும் , சூடா பஜ்ஜியும் அம்மா குடுத்து விடுறாங்க பாருங்க ...ஆஹா ...

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?..

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா? ...

தேசம் முழுதும் பேசும் மொழிகள்

தமிழ் போல் இனித்திடுமா ...ஆ ...ஆ ..?!.."

இப்போ எப்.எம் இல்லிங்க.... நான்தான் ...

மறுபடியும் மனசுக்குள் மத்தாப்பு ...

நடூல ....வாட்ஸாப்ப் பிளிங் ...னு மெசேஜ் ...

ஓபன் பண்ணா

மழை கவிதை ...அடடா ..

"சாக்லட் சிலை

மழையில் கரையுமாம்

--வீட்டிலேயே இருக்கவும் !"

..

"ஏட்டி மழையும் உன்ன போலத்தான்

நான் ரசிக்கிறேன் என்றவுடன்

வெட்கத்தில் நாணம் கொண்டு

சற்று நேரம் நின்று தான் விடுகிறாள் .."

சும்மா பின்ராய்ங்க போங்க !

அசிஸ்டன்ட் டைரக்ட்டர்ஸ் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா !

மழை வந்தாலும் வந்துச்சு பல டைமென்ஷன் ல ஸ்கோர் பண்றீங்களே ப்பா!

"மழை மழை

என் உலகத்தில் வருகின்ற

முதல் மழை

நீ முதல் மழை !"

கவிப்பேரரசரின் வைர வரிகளில் , ஹரிணியின் சில்லென்ற குரலில்

கூடவே உன்னி கிருஷ்ணன் சார் ...

"என்னவளே அடி என்னவளே

என் இதயத்தை தொலைத்து விட்டேன் !

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் "

என்ற பாடலுக்கு பிறகு இந்தப் பாடல் வேற மாதிரி அழகா இருக்கும் ..ஆனா ரொம்ப பேமஸ் ஆகல !

குடிச்ச காபி கோப்பையை வைக்கலாம்னு ஹாலை கிராஸ் பண்ணி போனா அங்க ... எந்த சேனலை மாத்துனாலும்-

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் வலுவாக தூத்துக்குடி அருகே வரும் என்பதால் மிக கடுமையான மழை அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரம் இருக்கும் ..

பயணங்களை தவிர்க்கவும் .. தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் ..மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் ..முக்கியமாக தேவையற்ற வேலையாய் கண்ட இடத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் !..

இரவு நேரங்களில் சூறை காற்றுடன் மழை இருக்கும் ...மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நியூஸ் ஹெட்லைன்ஸ் போய்ட்டு இருக்கு ..

ஓஹோ ..இதுக்காகத்தான் இப்டி விடாது பெய்யுதா னு தெரிஞ்சுச்சு ..

எதுவும் அளவோட இருந்தா தான பாக்கியம்! ...

"இதுக்கு நடுவுல --குட்டீஸ்

"ச்ச இப்டி மழை பெஞ்சுச்சுன்னா ஸ்கூலுக்கெல்லாம் லீவு விட்ருப்பாங்களே இல்ல மம்மி ...

(அவனவனுக்கு அவனவன் கவலை)

ஏண்டா நீங்கல்லாம் ஆல்ரெடி அனுவல் லீவுல இருக்கற மாதிரி தானடா இருக்கீங்க?! ...

இருந்தாலும் பிரெண்ட்ஸ் ச பாக்காம புள்ளைங்க ஒரு மாதிரி தான் இருக்காங்க போல .. ஸ்கூல் நினைப்பு வரத்தானே செய்யுது ...

தீவாளி அன்னிக்கு நல்ல வேளை இப்டி ஓயாம மழை பெய்யல ..

அப்புறம் வாங்கி வச்ச பட்டாச வெடிக்கனுமா இல்லையா ?

"எனக்கெல்லாம் தீவாளி கிடையாது ...பிக்காஸ் மை பிரெண்டு நரகாசுரன் டைடு " னு காமெடி பண்ணாம மிச்ச சொச்ச பண்டத்தைப் போய் சாப்ட்டு முடிப்போம் !

எப்புடியோ "அடடா மழ டா அட மழ டா" ன்னு நம்ம கார்த்தி சார் சாங் மாதிரி ஊர் மக்கள் ஹாப்பி அண்ணாச்சி ...

#தேநீரில் சிநேகிதம்

#சில்லுனு ஒரு மழைக்காலம்

#வாழ்தல் அழகு

(விஜயா கிப்ட்சன் - thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X