For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 4... "யாதும் ஊரே யாவரும் கேளிர்"!

Google Oneindia Tamil News

- விஜயா கிப்ட்சன்

நம்ம கிட்ட பாரதி இல்லையா? ..கம்பன் இல்லையா? .. துக்கத்தையும் சோகத்தையும் கூட ரசிச்சவன் தான் தமிழன்...

"என்ன இப்டி சொல்லிட்டாங்களே?" னு தான நினைக்கிறீங்க! ..

உண்மைங்க . ஏன்னா நம்ம மொழி அப்டி ..எந்த நிலையிலும் நம்மை நேராக தூக்கி நிறுத்தி வைப்பதற்கு நம் தாய்மொழி ஒன்றே போதும் ..."சுந்தரத் தெலுங்கு என்று குறிப்பிட்டுச் சொன்னாலும் - யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணூம்"னு சும்மாவா சொன்னான்? ...அத்தனை மொழிகளையும் கற்றுத் தேர்ந்து விட்டுத் தானே சொன்னான் பாரதி !.

Sillunnu Oru Anubavam Yaathum Oore Yaavarum Kelir written by Vijaya Giftson

(--அதுக்காக -"வயசுப் பொண்ணுங்க இங்கிலிஷ்ல "அங்கிள்" னு கூப்ட்டா ஒரு மாதிரியா இருக்கு ..அதுவே "மாமா" ன்னு தமிழ்ல கூப்ட்டா நல்லாதாம்யா இருக்குனு சொல்லப்டாது ஆமா !)

வானத்தை , மேகத்தை , நிலவை, ஓடையை, காடுகளை, வயல்களை, மானை, மயிலை, யானையை, சந்தோசத்தை, வருத்தத்தை, சிறு பிள்ளையின் நடையை, மழலை மொழியை , நாணத்தில் இமை தாழ்ந்து மண் பார்க்கும் காதலனை ரசிக்க முடிகிறது தானே ?! (அதென்ன எல்லாரும் காதலியையே சொல்றது?!)

ஆனா கோவத்த ரசிக்க முடியுமா?.....

"கைகேயி கோவமா இருக்கா ...பிறையின் களங்கம் தேய்ந்து அழிகின்ற மாதிரி அவள் நெற்றித்திலகத்தை அழிச்சாளாம்! ..."

என்று அதையும் ரசிச்சிருக்கான் கம்பன் !

என்னடா இம்புட்டு சீரியஸ் தலைப்பா இருக்கேன்னு தான யோசிக்கிறீங்க ...அது வேற டிபார்ட்மென்ட் ..

சங்க காலத்துலேர்ந்து யு டர்ன் போட்டு வண்டியத் திருப்பிக்கிட்டு இங்க வாங்க ....
நம்மாளு புயலயே ரசிச்சவம்யா .... எப்புடிங்கறீங்களா??
வருடா வருடம் ஆரவாரம் ! சென்னை மக்கள் திகில் !

Sillunnu Oru Anubavam Yaathum Oore Yaavarum Kelir written by Vijaya Giftson

அப்படின்னு நியூஸ் போடாத கொறையா
ஒவ்வொரு நவம்பர், டிசம்பரிலும் --வச்சு செய்யுது மழை அல்லது புயல் !
போன வாரம் "நி.....வ....ர் " வாரம் ...!

தமிழகத்தில் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு --வானிலை ஆய்வு மையம் --
"2020 கிளைமாக்ஸ் நெருங்கிருச்சு டோய்"
அதென்ன திடீர்னு ரெட் அலெர்ட்? --

ஒடனே போயி பிரட், பண்ணு, பிஸ்கட்டு , பாலு, மெழுகுவர்த்தி னு எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கோங்க , எப்புடியும் நாலஞ்சு நாளைக்கு வெளிய போவ முடியாதுன்னு வாட்சப் விசாரிப்புகள் !

சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் -- 20 நிமிசத்துல ஏர்போர்ட்டு , 15 நிமிசத்துல ரயில்வே ஸ்டேசனு , 10 நிமிசத்துல காலேஜ் னு கூவி கூவி விளம்பரம் பண்ணீங்களேடா..ஆனா ஒரு மணி நேரம் மழை பேஞ்சா எல்லாருமே நடுத்தெருவுலதாம்னு எவனாச்சும் சொன்னீங்களாடா? ...

"ப்..ரோ ... நா பஸ்சப் புடிச்சு சென்னைக்கு வந்துட்டேன்! ..சென்னையில நீங்க இருக்கற ஏரியா வ சொல்லுங்க ?!...
" இப்போதைக்கு நிலவரம் சரியில்ல ,அப்புடீக்கா வந்த மேனிக்கு திரும்பிப் போ....யி...ருங்க ப்....ரோ.. ... இங்கன ஊரே "ஏரியா" தான் இருக்கு !

டேய் நிவர்-
"உன்னால எங்கள் வீட்டில் இல்லை பவர் ..
எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர் ,
நீ வருண பகவானால் வந்த சவர் ...
கொஞ்சம் வேகமாக அடித்தால் இடிஞ்சு விழும் எங்க வீட்டு சுவர் .
.உன்னால் இப்போ சென்னையில் ரிவர் ...
(அட்ரா சக்க நம்ம டி. ராஜேந்தர் சார் தோத்தாரு போங்க ..)
இப்டியே நீ பெஞ்சுகிட்டு இருந்தா எங்களைக் காப்பவர் எவர் ?--

"ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிச்சிட்டு இருந்தானாம் !" ங்கற கதையா,
வீடே அடிச்சிட்டு போற வெள்ளத்துலேயும் எப்படி உக்காந்து கவித எழுதீர்க்கான் தமிழன் ! --தமிழ் ருசியா இல்லையா ?! இப்ப சொல்லுங்க ..

"நிவர் புயல் கரையைக் கடக்கும் வரை பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் " ங்கற ஸ்டேட்மெண்ட்க்கு நம்மாளு --"ஒரு வருசமா நாங்க வீட்டுக்குள்ளேயே தான் இருக்கோம் ஓவர்!" ன்னு பதில் கமெண்ட் .

அதுலயும் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர்ஸ் பாடு இருக்கே பா....டு..
அப்பப்ப்பா....
அப்புடியே லைவ் ல காமெராவை கொஞ்சம் லாங் ஷாட் ல வச்சுட்டு ..இங்க ஸ்டூடியோ லேந்து செய்தி வாசிப்பாளர் கேக்குறாரு ...
"சொல்லுங்க நடராஜன் , மழை நீர் எந்த அளவுக்கு வந்திருக்கு ..?"
"இப்ப பாத்தீங்கன்னா என்னோட இடுப்பளவுக்கு வந்திருக்கு சார் .."
அப்புடியே நில்லுங்க நடராஜன் ... கழுத்து அளவுக்கு வந்ததும் மீண்டும் இணைப்பில் வாங்க ..
நன்றி நடராஜன் நன்றி..

(யோவ் அத்தா தண்டி காமெராவை தோள்பட்டையில வச்சுக்கிட்டு அந்த கேமரா மேன் எங்கிட்டு யா நிப்பாரு? --மக்கள் மைண்ட் வாய்ஸ் )

இதுக்கு நடுவுல ரசிகர்கள் கூட்டம் ...

"சும்மா வழ வழ கொழ கொழ ன்னு இன்னாத்த பேசிகினே இருக்கானுங்க ...வர்ற புயல்ல பிக் பாஸ் செட் பறந்து காணாம போகுமா இல்லையா ?! " னு கேட்ருக்காய்ங்க ...

இந்த மழையில வீட்ட விட்டே வெளிய வர மிடியாதாம், இதுல இவனுங்க தங்க விலைய வேறக் குறைக்கிறாங்களாம் !
விலையை கம்மி பண்ணிட்டாப்ல ஒடனே கப்பல கிப்பலப் புடிச்சு கடைக்குப் போயி வளையலோ , செயினோ, மோதிரமோ , இல்ல பிரேஸ்லெட்டோ வாங்கீருவோம்னு நெனப்பு போல ...நல்லா வருவீங்கோ பாஸ் !

நம்ம புள்ளிங்கோ அல்லாம் பயங்கரம் ங்கற மாதிரி என்ன இருந்தாலும் இளைஞர் படை ...ஹெல்பிங் லைன் நம்பர்ஸ் லாம் அனுப்புனாங்க ...அதுக்கும் பாராட்டுக்கள் சொல்லியே ஆகணும் ..

நாம எதுக்கும் பாதுகாப்பாவே தூங்குவோம் னு வயித்த சுத்தி ஸ்விம்மிங்பூல்ல மிதக்கப் போற மாதிரி டயரக் கட்டிக்கிட்டு வடிவேலு அண்ணன் வேற தூங்குறாரு ! மீம்ஸ் ல தாங்க..

அதென்ன கொரோனாவுக்கு நிகரா --"நிவரு "..வந்ததே வந்துச்சு... சத்தமே இல்லாம ஊமக்குத்தா ரெண்டு குத்து குத்திட்டு போயிருச்சு" என்பது நெட்டிசன்களின் கலாய்ப்புகள்!

"அண்ணே நிவருப் புயலு வருதாம்ணே --அதான் நம்ம வைகைப்புயல வச்சு திருப்பி விடப் போறோம் " --அண்ணன் வடிவேலு இல்லையெனில் பாதி பேரு வாழக்கை தண்ணீரில் மூழ்குதோ இல்லையோ ...கண்ணீரில் மூழ்கித்தான் போயிருக்கும் போல ..

இப்படிப்பட்ட சூழ்நிலையையும் மிக சுவாரசியமாக ஆக்கிய ஆல் மீம் க்ரியேட்டர்ஸ் , மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மக்கள் சார்பா பெரிய நன்றியே சொல்லலாம் ...எதுக்காம் ...மனச லகுவாக்குனத்துக்கு தாங்க!..

இந்த தடவை -அரசும் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டே இருந்தது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாய் அமைந்தது !

என்னதான் நமக்குள்ள ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும் நம்ம சனத்துக்கு ஒண்ணுன்னா எந்த பேதமும் பாக்காம எல்லாரும் ஒன்னு கூடிறோமா இல்லையா? ...

தன் சக மனுஷனை நேசிக்கிற ஒருத்தனாலையும் , தன் தாய் மொழியை மதிக்கிறவனாலயும் மட்டும் தான் , ஒரு புயலின் தருணத்தையும்-தாக்கத்தையும் இவ்வளவு எளிமையாகக் கடந்து போக முடியும் ....

ஆதலால்

"பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!"
--என்று கை கோர்த்து ஒற்றுமையோடு என்றைக்கும் முன்னேறுவோம்!

சரிதானுங்களே !

-- விஜயா கிப்ட்சன்

( [email protected] )

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about the Nivar cyclone and people's reaction on it is written by Writer Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X