• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 2... "பெம்மி"!

|

- விஜயா கிப்ட்சன்

பெண்களுக்கு "அம்மா" என்று அழைப்பது வரம்னா, அத்தை, பெரியம்மா, சித்தி என்று முறை வைத்து கூப்பிடுவது கூடுதல் சந்தோசம்...

எங்க வீட்டு குட்டி மாண்டு எனக்கு பேரு வச்சிருக்கு ...."பெ.....ம்....மி .."

திரும்ப நல்ல்லா படிங்க..

சூரரைப் போற்று-- பொம்மி இல்ல!

இது "பெ...ம்..மி .."

"ஆனா அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கு! .... அதோட நின்னுச்சா இல்லிங்க .. எங்க ஊட்டுக்காரருக்கு "பெ...ப்...பி " ன்னும் பேரு வச்சிருக்கு ..

Sillunnu Oru Anubavam Pemmi written by Vijaya Giftson

என்னடா இவங்க "பெப்சி --கோலா "மாதிரி என்னென்னமோ சொல்ல வர்றாங்கன்னு தானே யோசிக்கிறீங்க ..!

"பெம்மி ன்னா பெரியம்மாவாம் ..
பெப்பி னா பெரியப்பாவாம் !"
--- தட் வாயெல்லாம் வலிக்கும் -ஷார்ட் பார்ம்ல கூப்டுக்கறேன் மொமெண்ட் !

பொடிசுகள் என்றைக்குமே அழகு.... அவர்கள் உலகம் தனி !

அப்போ தான் நல்ல்லா நெய் ரோஸ்ட்டுக்கு பக்கத்துல சொளப்ப சொளப்ப எண்ணெயை வேற ஊத்தி பொடியைத் தொட்டு கேட்டு வாங்கி காம்பினேஷனோட தோசை சாப்ட்ருக்கும் ...

முடிச்சு கை கழுவுறதுக்குள்ள "பெம்மி ஏதாச்சும் ஸ்னாக்ஸ் இருக்கா ?"
"உனக்கென்ன டா வேணும்" ...
"இ ..ந்...த.."
"ம்ம்..சொல்லு.."
"சாக்லேட் கீம் வச்சிருக்கும்ல?"
அப்டின்னா...
டூ கிராக்கர்ஸ் பிக்கி (பிஸ்கட்டு )கு நடுவுல டார்க் ப்ரவுன் கலர்ல நெறைய கீம் வச்சிருப்பாங்களே ...அது ...
ச்ச ...அது இல்லையே டா ..
"ஏன் நீங்களே காலி பண்ணிட்டீங்களா? "
(ஹி ..ஹி )
அப்போ சீஸ் பிக்கி இருக்கா ? அது குடுங்க ...ன்னு
கேட்டுகிட்டே டப்பா டப்பா வா உருட்ட ஆரம்பிச்ரும் ..
அப்புடியே நடந்து சைடுவாக்குல பிரிட்ஜ் பக்கமா வந்து ....
அப்பன்னா பிரிஜ்க்குள்ள வேற என்ன வச்சிருக்கீங்க ?... ஒரே என்கொயரி
பேசிக்கிட்டே படக்குன்னு பிரிஜ் டோர தொறந்திருச்சு ...

நேத்தே சாம்பாரோ , ரசமோ, இல்ல வத்த கொழம்போ , நாளைக்கு சாப்ட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும்னு மண்சட்டியில செஞ்சு வச்ச மீன் கொழம்போ, தோசை மாவோ, தயிரோ, மோரோ தான் இருக்கும்ங்கறது நமக்கு தான தெரியும் ...அவ்வ்வ்வ்வ்..

அது என்னமோ உள்ள நாம ஆல்மண்ட் நட்ஸ் கேக்கும், அமுல் ஐஸ்க்ரீம் அரைகிலோ டப்பாவும் எப்பயும் ஸ்டாக் ல வச்சிருக்குற மாறியே பேசுறது!

இப்டி கச்சா முச்சானு என்னத்தையாது பேசிக்கிட்டே கூடவே சுத்தும் ...
பெண் பிள்ளைகள் அதிகமாக கதைப்பார்கள் போலும் ...நேரம், போவதே தெரிவதில்லை ..
ஆனா பாய்ஸ் எப்போவும் கார் , பைக்கு , டிவி கேம்ஸ் னு வேற ரூட்ல இருக்காய்ங்க ...
பிரிட்ஜ்க் குள்ள திஸ் வீக் எக்ஸ்ட்ராவா ஸ்வீட் பாக்ஸஸ் ....
கேமேராவை ஜூம் பண்ணி கிளோஸ் அப் ஷாட் வச்ச மாதிரி கண்ணு அங்க போயி நிக்குது ....
அடுத்த ஆராய்ச்சி அங்க தான் !

"தீவாளிக்கு உங்க பிரென்ஸ் இவ்ளோவ்வ் சுவீட்டா குடுத்து வுட்டாங்க?"...
"ஆமா டா !"
வெரி வெரி குட் பிரெண்ட்ஸ் இல்ல பெம்மி!
(பாரேன் எப்டி எல்லாம் இப்போவே யோசிக்குது பொடிசு ..)
"அப்போ உங்களுக்கு நெறைய பிரென்ஸ் இருக்காங்க னு சொல்லுங்க !"

(ஆத்தாடி உனக்கும் தெரிஞ்சுருச்சா ?.)

"அண்ட பாக்ஸ் ச எடுங்க ....
எது ?
"ரோஸ் கலர் ல ஜிகினா மாடிரி போட்ருக்கே ...அது"
"கோல்டன் கலர் பாக்ஸ்சாடா ?"

"ம்ம் ..ஹூ"

"பிங்க் ....பிங்க் ...."

"எடுத்து ஓபன் பண்ணியாச்சு ..."

"உள்ள பாத்தா டோல் கேட் ல வரிசையா வண்டி நிக்கறது கணக்கா லைன் லைனா வக தொகையா சுவீட்சு ! .."

"இது என்னது பெம்மி ?"

"அல்வா டா "

" என்ன பெம்மி அல்வாவப் போயி ரெக்டாங்கில் ஷேப்புல வச்சிருக்காங்க ? "

"மைசூரு பாக்கு தானே அப்டி இருக்கும் ?"

வழ வழன்னு வாழை இலையில சுடச்சுட வச்சு சாப்பிட்ட இருட்டு கடை அல்வா நினைவுக்கு வந்திருச்சு ...ஆமா அப்புறம் என்னைக்கு நம்ம அல்வாவ கேக் பீசு மாதிரி வெட்டி வச்சு தின்றுக்கோம்? ..சொல்லுங்க ..

கம்ப்யூட்டர் காலம் டா கண்ணு .. எல்லாம் மாறி போச்சு னு சொல்லி சமாளிக்கலாம் னா
ஆமா கம்ப்யூட்டருக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குமே! ...

"இப்ப எப்புடி சமாளிக்கிறதுன்னு தெரியலியே !"

"ஆ ....அ.....து இப்டி உன்ன மாதிரி குட்டீஸ்லாம் ஈஸியா கையில எடுத்து ..ஆ போட்டுக்கலாம்ல அதுக்காக தான் ரெக்டாங்கிள் ஷேப்புல கட் பண்ணி அழகா அடுக்கி வச்சிருக்காங்க ...(நாம இப்புடீக்கா போவோம் ...)

"ம்...ம்..."

(அடுத்து என்ன லெக்ச்சர் குடுக்கணுமோ தெரியலியே ....)

"வொயிட் கலர்ல குட்டி ஸ்கொயரா இருக்கே பெம்மி அது என்ன?" ....

(அவங்களுக்கு கலர்ஸும் ஷேப்ஸ்சும் தெரியுமாம் - எல்.....கே.....ஜி படிச்சிருக்காங்களாம் !)

"அது தேங்கா முட்டாய் டா "

"அப்டியா ....கோக்கனட் எப்பிடி ஸ்கொயர் ஆச்சு ..."

"கோக்கனட்ட மொதல்ல ஒடச்சு நல்லா துருவி ...."

"அப்டின்னா ....."

"சரி ...நல்லா ஸ்க்ரேப் பண்ணி ...."

"ம்ம் ..."

"அடுப்புல வச்சு பெரிய்ய சட்டியில போட்டு சுகர் சேர்த்து மிக்ஸ் பண்ணி செய்வாங்கடா !"

"அப்புடியா? ..."

"ஆமா டா "

"ஆத்தீ நா இப்போவே கிருஷ்ணா சுவீட்சு ஓனரப் பாத்து ஒண்ணு பேட்டி எடுக்கணும்-- இல்ல கிச்சனுக்கு போயி மாஸ்டர் கிட்ட கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போலயே சாமி !"...

நம்ம எப்புடி? ...ஒடனே (டேக் டைவெர்சன் )

"இதப் பாத்தியா டா உனக்கு ரெம்ம்ம்ப்ப புடிக்குமே ல...ட்...டு !"

"தாத்தா போன வாரம் சாப்பிடும்போது எனக்கும் குடுத்தாங்க- அது எல்லோ கலர்ல இருந்துச்சு ...இது என்ன பெம்மி ஆ ...ர ....ஞ்...சு கலர்ல ல இருக்கு ....?"

"அது நம்ம கேசரி செய்யும் போது கொஞ்சூண்டு ஒரு கலர் பொடி போடுவோம்ல அது மாதிரி ஆட் பண்ணிக்கிட்டா இந்த கலர் வந்திரும் டா ..!"

"ஒஹோ...அதான பாத்தேன் ...அன்னைக்கு ஒரு நாள் பேபி பூந்தி சாப்ட்டேனா அதுல க்ரீன் கலரு, வொயிட் கலரு , எல்லாம் இருந்துச்சு ...

வாவ் குட் கேள் ...இவ்ளோ கவனிச்சிருக்கியே....

"ஆமா எனக்கு எல்லாம் தெரியும் ...."

ச....ர்.....தா.....ன் ....

"சரி ....உனக்கு என்னென்ன சுவீட் லாம் புடிக்கும் ....?!"

"எப்பவாச்சும் ஜாம் பண், ஹனி கேக் சாப்பிடுவேன் ....மத்தபடி எனக்கு மிச்சர் , ஓமப்பொடி , பக்கோடா , மாதிரி காரம் தான் நெறைய புடிக்கும் ..."

"அதான் எங்க மிஸ்ஸு சொல்லிருக்காங்கல்ல ..."

"என்னன்னு ?!"

"நெறைய ஸ்வீட்ஸ்சு சாப்பிட்டா பல்லுல சொத்தை வருமாம் , கேவிட்டிஸ் வந்துருமாம் ..அதுனால ரொம்ப சாப்பிடக்கூடாதாம் ...."

"அம்மாவும் ஸ்வீட் சாப்ட்டா திட்டுவாங்கல்ல .. அது பேட் ஹாபிட் .."ன்னு சொல்லிட்டு

டேய் அண்ணா டிவி பாப்போமா ....டோரி இல்லேனா ஸ்பைடர் மேன் போடுடா .. ன்னு கொண்டு வந்த கரடி பொம்மைய கையில இடுக்கிகிட்டு அசால்ட்டா சொல்லிட்டு போயிருச்சு ..

("அ......டே....ய் அப்புறம் இம்புட்டு நேரம் எதுக்குடா எங்கிட்ட சிபிஐ மாதிரி கமிஷன் வைக்காத கொறையா என்கொயரி பண்ண ?!")

#வாழ்தல் இனிது
#குழந்தைகள் உலகம்
#சிரிப்பு மத்தாப்பு

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

ஆசிரியர் தொடர்புக்கு : விஜயா கிப்ட்சன்- thanga.vijaya@gmail.com

[அத்தியாயம்: 1, 2]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about the Pemmi written by Writer Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X