• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

"சில்லுன்னு ஒரு அனுபவம்".. விஜயா கிப்ட்சனின் புதிய தொடர்.. "சிலுக்கு சட்ட".. அத்தியாயம் 1

|

- விஜயா கிப்ட்சன்

வீட்டிலேயே அடஞ்சு கிடஞ்சா அதுவும் ஒரு மாதிரிதான் இருக்கு.. ஏப்ள என்ன சும்மா முடங்கிய கிடக்க என்று யாராச்சும் கேட்டாக் கூட ஆமா என்னத்த வெளியில் அள்ளப் போறோம்.. இந்த கொரோனா பக்கிதான் நட்ட நடு சென்டர்ல உக்காந்து அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்குல்லா என்றுதான் புலம்ப வேண்டியிருக்கிறது.

ஆனா நம்ம மைன்ட் வாய்ஸை கரெக்டா கேட்ச் பண்ணி இன்னிக்கு ஒரு வேலை வந்துச்சா.. டக்குன்னு கிளம்பி டூ வீலரை எடுத்துக்கொண்டு பஸ் நிலையம் வரை போக வேண்டி இருந்தது..

 Sillunnu Oru Anubavam Silukku Satta story written by Vijaya Giftson

சரி கிளம்பலாம்னு ஹெல்மெட் எடுத்து போட்டாச்சு .. மண்டக்கட்டி கணக்கா கனக்கு!

வண்டி பாக்ஸை திறந்தோன இடமே இல்லாம அடச்சுக்கிட்டு என்னோட புக்ஸும், மாஸ்க்கும் கூடவே ரெயின் கோர்ட்டும் ! மேலே மண்டையை உசத்தி அப்புடிக்கா வானத்த பாத்தா பங்குனி மாசத்துல பல்லக் காட்டுற மாதிரி சுளீர்னு வெயிலு ! சரிதான்!

வாசக்கதவுகிட்ட நின்னுட்டு திரும்புனா , அங்க அப்பா நண்பர் வந்திருக்காருன்னு பேச வெளிய வராங்க...அப்புடியே அந்த ரெயின் கோட்டை எடுத்து அப்பாகிட்ட குடுத்துட்டு ... "இன்னிக்குலாம் மழ வராது டாடி " ன்னு சொல்லிட்டு தெனாவெட்டா கிளம்பிட்டேன் .

பாதி தூரம் போவல ..ச..ட....ச ...ட ..ச ....ட .ன்னு மழை!

-- ஷ்ஷப்பா.. இந்த ரமணன் வேற ஞாவகத்துக்கு வாராரு ...(லீவு விட்டா மழ பெய்யாதே அது மாதிரி, நம்ம ரெயின் கோட்டை வச்சோம்ல.... )

சின்ன வயசுல ஆச்சி சொல்வாங்களே

"இப்டி மழையு வெயிலு ஒரே நேரத்துல அடிச்சா காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்"னு.. நினைச்சோன சிப்பு சிப்பா வந்துட்டு ..வண்டிய ஓரங்கட்டிட்டு இறங்கிட்டேன் . அதுக்கு மேல போக முடியலை மக்கா.

பக்கத்துல ஒரு ஹாஸ்டல் பில்டிங் ..

வேகமா ஹெல்மெட்டோட வாசப்படில போய் நின்னுட்டேன் ..

அங்க இருந்த வார்டன்

"மேடம் நீங்க.. போன வாரம் அந்த ....பு ....க் ...கு .....?"

"ஆமாங்க நான்தான் .."

(என்னமோ போடா மாதவா )

உள்ள கூப்ட்டு போய் "மேடம் உக்காருங்க "....னு சொல்லிட்டு எங்கயோ போய்ட்டாங்க ..

வெளிய வரும்போது டப்பா நிறைய கேக்கு ...

(மணி வேற ஒண்ணே முக்கா ...நன்னா பசிக்கிற டைம் தான் )

"எனக்கு பொறந்த நாள் மேடம் ....கேக்கு எடுத்துக்கோங்க "

"வாழ்த்துக்கள் மா ..உங்க பேரு ..?"

"கனி "

"இங்கயேவா தங்கி இருக்கீங்க .."

ஆமாங்க மேடம்"

"ஊரு ?

--கயத்தாறு "

பின்னாடி ஒளிஞ்சிருந்து ஒரு பொடிசு என்னையவே பாக்குது ..

"டேய் ..இங்க வாடா..உம்பேரு என்ன? ..."

சொல்ல மாட்டாம.. அது பாட்டுக்கு என்னையவே வித்யாசமா பாக்குது !

அந்த குட்டி மண்டைக்குள்ள என்ன தோணுச்சோ?...

அப்புறம் ஹாய் ங்கிற மாதிரி கையசைப்பு ..

"உன் சட்ட சூப்பரா இருக்கே ..இங்க வா பாப்போம் னேன் ..

வந்திருச்சு ...

"ஒனக்கு மட்டும் இன்னிக்கே தீவாளி வந்துட்டு போலயே !"

ஈ ....ஈ ன்னு நெளிஞ்சுக்கிட்டே சிரிக்குது ..

வெளியில மழை லைட்டா வெறிச்ருச்சு ....

தன் பங்குக்கு குட்டி கேக் பீஸ் ஒண்ண என் கையில கொடுத்துச்சு ..

வாங்கிக்கிட்டேன் ..

"உன்ன ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா..?

டக் னு முகத்தை திருப்பிக்கிட்டான் ..

ஒரு நிமிஷம் இங்க பாரு ..

ம்ம்ஹும் ..திரும்பல

போன் காமெராவை ஆன் பண்ணிட்டு ..உடனே கையில இருக்கற கேக்க பாத்து

"இந்த கிரீம் பச்சை கலரா , வெள்ளக் கலரா " ன்னேன் பாருங்க ..

----ம்ம்ம்ம் னு திரும்புச்சு புடிச்சிட்டேன் ....சிலுக்கு சட்டைய ...

"நீயின்னும் உம்பேரச் சொல்லலையே ?"

"அந்தோணி !"

*அவ்வ்வ்வ்வ் அந்தோணிக்கு தீவாளி வாழ்த்து சொன்ன மொத ஆளு நானா தான் இருப்பேன்!

ஆனா அந்தோணி சிரிச்சாம் பாருங்க ஒரு சிரிப்பு.. அது ஆயிரம் தீவாளிய்யா.!

#வாழ்தல்இனிது #வாழ்க்கைஅழகானது

#நெல்லையில்ஓர்மழைக்காலம்

ஆசிரியர் தொடர்புக்கு: விஜயா கிப்ட்சன் - thanga.vijaya@gmail.com

[அத்தியாயம்: 1, 2]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and Silukku Satta is the first article written by Writer Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X