பாஜகவை குறி வைக்கும் திமுக.. தமிழர் வாழ்வு, சமத்துவத்தை காக்க இதுதான் அவசியம்: டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: திமுக அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன என்பது பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். பாஜகவின் வருகைக்கு பின், தமிழர்களின் வாழ்வையும், சமத்துவத்தையும் பாதுகாக்க பெரும் பணியாற்ற கடமை திமுகவிற்கு உள்ளதாகவும், இது தேர்தலை நோக்கிய பயணமாக மட்டுமல்லாமல், மக்களிடையே பாஜகவின் பொய் பிரச்சாரங்களையும் முறியடிக்க வேண்டிய பணியையும் செய்ய வேண்டியுள்ளதாக டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2024ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுகவும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளில் திமுகவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

திமுக அணிகளின் கூட்டம்
இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் துவங்கியது. திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி என 23 அணிகள் இருக்கின்றன.

பாஜக vs திமுக
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பாஜகவின் பிரச்சாரங்களை முறியடிக்கவும், மக்களிடையே திமுகவின் சாதனைகளையும் எடுத்து செல்லவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. திமுக குறித்து குடும்ப அரசியல், ஊழல் புகார்கள் ஆகியவற்றை பாஜக கையிலெடுத்து மக்களிடையே பேசி வருகிறது. இதனால் திமுகவின் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் பிரச்சாரங்களை முறியடிக்க அனைத்து அணிகளும் தீவிரமாக பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழக அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளை எப்படி முறைப்படுத்த வேண்டும், திமுகவின் திட்டங்களை குறித்து மக்களிடம் எத்தகைய கருத்துக்கள் கூற வேண்டும், என்ன வேகத்தில் திமுகவினர் செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பாஜகவின் பொய் பிரச்சாரம்
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், அதனை கடந்தும் இயங்க வேண்டிய இயக்கம் திமுக. பாஜகவின் வருகைக்கு பின், தமிழர்களின் வாழ்வையும், சமத்துவத்தையும் பாதுகாக்க பெரும் பணியாற்ற கடமை திமுகவிற்கு உள்ளது. இது தேர்தலை நோக்கிய பயணமாக மட்டுமல்லாமல், மக்களிடையே பாஜக யார் என்பதை புரிய வைக்க வேண்டிய வேலையையும் பார்க்க வேண்டியுள்ளது. பாஜக பரப்பிவிடும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ஜெபி நட்டாவுக்கு பதிலடி
தொடர்ந்து திமுக குடும்ப அரசியல் செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா விமர்சனம் பற்றிய கேள்விக்கு, பாஜக என்ற கட்சி குஜராத்தின் இரு பணக்காரர்களுக்கு ப்ரோக்கர் வேலை பார்ப்பதற்கான கட்சியாக விளங்குகிறது. பொதுத்துறை நிறுவனங்களை இரு பணக்காரர்களிடமும் விற்பதற்கான கட்சியாக விளங்குகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications