Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படையப்பா சிவாஜி கேரக்டர் கெத்து இல்ல.. வெத்து.. படத்தை நல்லா பாருங்க புரியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடிப்பில் வெளியான 'படையப்பா' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தாலும், அப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஏற்றிருந்த ஜமீன்தார் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், உண்மையில் அந்தக் கதாபாத்திரம் மிகவும் சில்லித்தனமாக சித்தரிக்கப்பட்டதாகவும், சுயநலம் மிக்கதாகவும் அமைந்திருப்பதாக ஒரு புதிய பார்வை சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

படையப்பா ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அந்த படத்தை மீண்டும் பார்த்தால், இந்த கோணத்தில் யோசித்து பாருங்கள். அட.. ஆமால்ல.. என்று தோன்றுவது மட்டும் நிச்சயம். இதோ, சிவாஜி கதாப்பாத்திரத்தின் மறுபக்கத்தை லிஸ்ட் போட்டுள்ளோம் பாருங்கள்.

Padayappa Rajinikanth

தம்பிக்கு சொத்தில் பங்கு மறுப்பு: தந்தையின் மறைவுக்குப் பிறகும், தன் தம்பிக்கு (மணிவண்ணன்) உரிய சொத்துப் பங்கைப் பிரித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால்தான் சொத்தை பிரித்துக் கொடுக்க மணிவண்ணன் கேட்கும் நிலை வந்தது.

மகன் உழைப்பில் பெருமை: தான் நன்றாக இருந்த காலத்தில், சொந்தமாக உழைத்து சொத்து சேர்க்காமல், தன் மகன் (படையப்பா) சம்பாதித்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்குவதை தன் பெருமையாகச் சொல்லிக் கொண்டது.

ரகசியத்தை உடைத்த அவமானம்: தன் தம்பி மணிவண்ணன் கண்ணியமாகக் கேட்டபோது, தன் தாய் சத்தியம் செய்து யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்ன ரகசியத்தை (மணிவண்ணன் கள்ள உறவில் பிறந்தவர்) ஊர் மக்கள் முன்னிலையில் கூறி, "ஆமாம்டா, நீ கூத்தியா புள்ளதான்" என்று சொல்லி அசிங்கப்படுத்தியது.

சொத்தைக் கொடுத்து கவுரவம் தேடல்: மொத்தச் சொத்தையும் பிரித்துக் கொடுத்தால் கவுரவம் போய்விடும் என்று நாடகமாடி, தன் தம்பிக்கு மொத்தச் சொத்தையும் அளித்துவிட்டு 'நல்லவர்' என்ற பெயரை வாங்கிக் கொண்டார். ஆனால், குடும்பத்தோடு போய், குடிசையில் வாழ மனமில்லாமல் தூணைப் பிடித்துக்கொண்டே உயிர் துறந்தது.

தம்பியை வில்லனாக்கிய நாடகம்: "எல்லாவற்றையும் உனக்கே தருகிறேன்" என்று வாயால் சொல்லிவிட்டு, ஊர் மக்கள் முன்பு, தம்பி முழுச் சொத்தையும் வாங்கி தன்னை ஏமாற்றிவிட்டது போல ஒரு காட்சியை ஏற்படுத்தி, தன் தம்பியை வில்லனாக மக்கள் நம்பும்படி செய்தார்.

மகனின் மீதே சந்தேகம்: நீலாம்பரி ஊர் மக்கள் முன்னிலையில் படையப்பாவுக்கு முத்தமிட்டவுடன், "உன் மகன் அந்தப் பொண்ணுகிட்ட என்ன திருவிளையாடல் பண்ணினான்னோ" என்று லட்சுமியிடம் சொல்லி, தன் பெத்த மகனையே சந்தேகப்பட்டார். கவனிச்சீங்களா..

உயிர்போகும் நேரத்திலும் சுயநலம்: எல்லாவற்றிற்கும் மேலாக, உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கூட, சற்றும் தாமதிக்காமல் தன் மனைவியின் தலையில் உள்ள பூவைப் பறித்து தரையில் போட்டது. இன்னும் கொஞ்ச நாள், அவர் மனைவி பூவோடு இருந்தால்தான் என்னவாம் என்று கேட்க வைத்த காட்சி அது. கொஞ்சம்கூட எதையும் விட்டுக் கொடுக்காத பக்கா சுயநலவாதி கேரக்டர் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில், சிவாஜி கணேசனின் இந்தக் கதாபாத்திரம் வெளிப்புறத்தில் கெத்தாகத் தெரிந்தாலும், உள்நோக்கிலும் செயலிலும் சுயநலமும், சிறுபிள்ளைத்தனமும், நாடகமும் நிறைந்ததாகவே அமைந்திருந்தது என்கின்றனர், படத்தை பக்காவாக பார்த்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+