Anaswara Rajan: ‘வித் லவ்’ நடிகை அனஸ்வரா ராஜன் யார் தெரியுமா? ரஜினியுடன் இப்படி ஒரு பந்தம் இருக்காம்!
சென்னை: (With Love movie actress Anaswara Rajan) மலையாள சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகை அனஸ்வரா ராஜன், இப்போது தமிழ் ரசிகர்களிடமும் மெதுவாக இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். 'வித் லவ்' படத்தின் மூலம் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். படம் பிப்ரவரி 6-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், இப்போது அவர் ரசிகர்களில் க்ரஸ் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். இவர் யார் என்ற தேடல் அதிகமாக இருக்கிறது. அவரைப் பற்றி பார்க்கலாம்.
அனஸ்வரா வித் லவ் படத்தின் ப்ரோமோஷனில் பேசும் போது", தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வித் லவ்' டீமோட இருக்கும்போது வீட்டுல இருக்க மாதிரியே ஃபீல் வரும்" என்று மலையாளம் கலந்த தமிழில் இயல்பாக பேசி இருந்தார்.மேலும், இயக்குநர் மதன் கதை சொல்ல வந்த முதல் நாளே, கதையின் ஃபீல் பிடிச்சு அடுத்த நாளே ஓகே சொல்லிட்டாராம். "இவ்வளவு சீக்கிரமா ஓகே சொன்ன முதல் படம் இதுதான்" என்று சிரிச்சுக்கிட்டே சொல்கிறார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அவரோட வேலை பண்ணிய அனுபவம் பற்றி பேசும்போது, "தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்தப்போ அபிஷனோட எனக்கு சரியா வைப் செட் ஆகல. ஷூட்டிங் ஸ்டார்ட் ஆன பிறகுதான் எல்லாம் நார்மல் ஆயிடுச்சு. அப்புறம் நல்ல கம்ஃபர்ட்டபிளா வேலை பண்ண முடிஞ்சது" என்று ஓப்பனா சொல்கிறார்.
அனஸ்வரா நடித்த படங்களில் தனக்கு ரொம்ப பிடிச்சவை எவைன்னு கேட்டா, "சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் - இந்த நாலு படங்கள்தான். யாராவது 'உன் படத்துல எது பாக்கணும்'ன்னு கேட்டா இதைத்தான் சொல்வேன்"னு நேரடியா சொல்கிறார்.
With Love Review: வித் லவ் படம் எப்படி இருந்தது? காதல் மனதை கவர்ந்ததா? கடுப்பாக்கியதா? ரிவ்யூ இதோ
இது மட்டுமல்லாமல், அவர் சினிமாவுக்கு வரவே ஒரு பெரிய காரணமே ரஜினிகாந்த் தான் என்பதையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். "என் அப்பா தீவிரமான ரஜினி சார் ரசிகர். ரஜினி சார் படங்கள் பார்த்து வளர்ந்ததால தான் எனக்கும் சினிமா மீது ஒரு ஈர்ப்பு வந்தது. உண்மையிலேயே சொன்னா, ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவுக்கே வந்தேன்" என்று ரஜினி மீது தனக்கு இருக்கும் மரியாதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமீப காலமாக அனஸ்வரா ராஜன் இளம் ரசிகர்களின் 'கனவு கன்னி' லிஸ்ட்ல கூட இடம் பிடிச்சிருக்கிறார். சிம்பிளான லுக், இயல்பான நடிப்பு, எந்த அளவுக்கு போகணுமோ அந்த அளவுக்கே எக்ஸ்பிரஷன் கொடுக்குற ஸ்டைல் - இதெல்லாம் சேர்ந்து அவரை தனி வகை நடிகையா காட்டுது. கிளாமரைக் காட்டிலும் கேரக்டர் முக்கியம் உள்ள கதைகளில்தான் நடிக்கணும்னு அவர் தேர்வு பண்ணுறதும் பலருக்குப் பிடிச்ச விஷயமா இருக்கு.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பிச்ச அனஸ்வரா, வயசுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து மெதுவா வளர்ந்து வந்தவர். அதே மாதிரி தமிழிலும் பெரிய ஹீரோயின் என்ற அடையாளத்தை உடனே பிடிக்கணும்னு அவசரம் இல்லாம, நல்ல கதைகள் வந்தா மட்டும் நடிப்பேன் என்ற முடிவில்தான் இருக்கிறார். அதனால் தான் 'வித் லவ்' மாதிரியான சிம்பிளான, காதல் கலந்த கதையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
'வித் லவ்' படம் இளம் காதல், சின்ன சின்ன கனவுகள், மனசுக்குள்ள ஓடும் உணர்ச்சிகள் ஆகியவற்றை லைட்டான டோன்ல சொல்ல முயற்சி செய்யும் படம். இந்த படம் அனஸ்வரா ராஜனுக்கு தமிழில் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. படம் ஹிட் அடிச்சா, அடுத்தடுத்து தமிழில் அவரை அதிகம் பார்க்கலாம் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஓடும் டாக்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications