ஒன் + ஒன் = ஜீரோ தொடர்... மூன்று வாசகர்களுக்கு மதியூகன் பட்டம்! - ராஜேஷ்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒன் + ஒன் = ஜீரோ கடந்த ஒரு வருட காலமாக ஒன் இந்தியாவில் வெளி வந்து வாசகர்களுக்கு மத்தியில் பரபரப்பாய் படிக்கப்பட்டது. பொதுவாக நான் எந்த ஒரு புது நாவலையும் பொழுதுபோக்குக்காக எழுதுவது இல்லை.

கதையில் ஒரு Moral மற்றும் ஒரு Poetic Justice இருக்கும்படியாய் பார்த்துக் கொள்வேன்.

Rajeshkumar's conclusion for One+One=Zero series

இந்தக் கதையிலும் கூர்நோக்கு இல்லத்து சிறுவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். கூர்நோக்கு இல்லங்கள் இளம் குற்றச் சிறார்களை நல்வழிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் அந்த சிறுவர்கள் தப்பித்துப் போக முயற்சி செய்கிறார்கள். சிலர் அதில் பிடிபடுகிறார்கள். சிலர் பிடிபடுவது இல்லை. இது ஏன்? இப்படி நடந்து இருக்கலாமோ என்கிற எண்ணத்தில் கற்பனையில் எழுதப்பட்ட நாவல் இது. இப்படியெல்லாம் நடந்து விடக் கூடாதே என் கவலை.

க்ரைம் என்கிற ஒரு விஷயம் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. அது வெளிப்படும்போதுதான் 'ஓ...! இங்கேயும் இப்படி எல்லாம் நடக்கிறதா' என்று ஆச்சர்யப்படுகிறோம்.

மதியூகன்கள்

இந்தக் கதையின் முடிவை 3 பேர் சரியாக யூகம் செய்துவிட்டார்கள். அவர்கள்:

ப சுகதேவ் Sugumek@gmail.com
எஸ் விஜயகுமார் s_vijayakumar8@yahoo.com
ரஞ்சித் எஸ் ranjithesm@gmail.com

இவர்கள் மூவருக்கும் 'மதியூகன்' என்ற பட்டத்தை ஒன்இந்தியா சார்பிலும், என் சார்பிலும் வழங்கப்படுகிறது. அவர்களுக்குப் பாராட்டுகள்.

ஃபைவ் ஸ்டார் குற்றங்கள்.. அரசியல் த்ரில்லர்!

இனி ஒரு வாரம் இடைவெளி விட்டு
நான் ஒன்இந்தியா தமிழில் எழுதப் போகும்
புதிய தொடரின் தலைப்பு

'ஃபைவ் ஸ்டார் துரோகங்கள்'

-இது புயல் கிளப்பும் ஒரு பொலிடிக்கல் தொடர்!

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

- ராஜேஷ்குமார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajeshkumar's conclusion for One+One=Zero series

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற