For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check : இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாக மீண்டும் பரப்பப்படும் வீடியோ.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலில் திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி விழுந்ததாக கூறப்படும் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

Recommended Video

    DMK உடன் இணைந்து OPS செயல்படுகிறார் - Anbazhagan

    கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் செய்தி தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சத்யன், இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்குவதாக கூறி சமூகவலைதளத்தில் பரவி கொண்டிருந்த ஒரு வீடியோவை காண்பித்து விவாதத்தில் பேசினார்.

    கோவை சத்யன் வீடியோவை காண்பித்த போது அதை திமுக சார்பில் கலந்து கொண்ட பேராசிரியர் கான்ஸ்டன்டைன் மறுத்தார். மேலும் அந்த விவாத நிகழ்ச்சியின் நெறியாளரும் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

    ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்! ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!

    எதிர்க்கட்சியினர்

    எதிர்க்கட்சியினர்

    அந்த வீடியோவை எதிர்க்கட்சியினர் பரப்பி கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்றால் கருணாநிதி வயதான பெண் ஒருவருக்கு மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்குவது போல் இருக்கிறது. சுமார் 3 வினாடிகள் மட்டுமே பதிவான வீடியோவில் அந்த பெண் யார் என தெளிவாக தெரியவில்லை.

    தவறான தகவல்

    தவறான தகவல்

    ஆனால் அவர் இந்திரா காந்தி என தவறான தகவல் பரப்பப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் உயரம், தோற்றம் போன்றவற்றை வைத்து அவர் இந்திரா காந்தி போல் இல்லை. இந்திரா காந்தி உயரமானவர். ஆனால் அந்த பெண்மணியோ கருணாநிதியை விட உயரம் குறைவானவராகவே இருக்கிறார்.

    கோவை சத்யன்

    கோவை சத்யன்

    இதையடுத்து திமுக சார்பில் கோவை சத்யனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் கருணாநிதி காலில் விழுந்தது இந்திரா காந்தி அல்ல. அவர் அறிஞர் அண்ணாவின் மனைவி ராணி என்றும் அவர் காலில் விழுந்துதான் கருணாநிதி ஆசி பெற்றார் என்றும் அவர் கருணாநிதியை விட வயதில் மூத்தவர் என்றும் குறிப்பிடப்பட்டது.

    இறந்துவிட்டாரே

    இறந்துவிட்டாரே

    மேலும் இந்த வீடியோ சென்னையில் அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கருணாநிதியால் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. ஆனால் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியே மறைந்துவிட்டார். அப்படியிருக்கும் போது 1987 ஆம் ஆண்டு விழாவில் இந்திரா காந்தி எப்படி கலந்து கொண்டிருப்பார் என திமுகவின் ஐடி விங்க் கேள்வி எழுப்பியிருந்தது.

    நெட்டிசன்

    நெட்டிசன்

    இந்த வீடியோ வைரலான சம்பவமும் அதற்கு திமுகவினர் பதிலடியும் நடந்து இரு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இதுகுறித்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியாமலேயே போய் இருக்கும் என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்திருந்ததும் அதற்கு இன்னொருவர் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விளக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    வீடியோ- இந்திரா காந்தியின் காலில் விழுந்தாரா

    வீடியோ- இந்திரா காந்தியின் காலில் விழுந்தாரா

    உண்மை- இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழவே இல்லை, வீடியோவில் இருக்கும் பெண் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மாள். 1987 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலய திறப்பு விழாவில் எடுத்த வீடியோ இது. 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தி 1987 இல் நடந்த ஒரு நிகழ்வில் எப்படி கலந்து கொண்டிருக்க முடியும்?

    எனவே இது தவறான தகவல்

    Fact Check

    வெளியான செய்தி

    வீடியோ- இந்திரா காந்தியின் காலில் விழுந்தார் கருணாநிதி

    முடிவு

    வீடியோ- இந்திரா காந்தியின் காலில் விழுந்தார் கருணாநிதிஉண்மை- இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழவே இல்லை, வீடியோவில் இருக்கும் பெண் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மாள். 1987 ஆம் ஆ

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    Fact Check: Did Karunanidhi touches Indira Gandhi's feet in a function? What is the reality?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X