மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர்! பிரதமர் மோடி பெயர் சூட்டுகிறாரா? உண்மை என்ன?
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அது தவறானது என செய்தி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழாவானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் அவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம், மேலும் பல்வேறு கிராம மக்களும் முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு நடத்துவர்.

பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறிவரும் நிலையில் தற்போது இணையதளங்களில் வேறு ஒரு தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என நீண்ட காலமாகவே பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது.

புகைப்படம்
ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரு தரப்பினர் பெயரை சூட்ட வேண்டும் எனவும் மற்றொரு தரப்பினர் பெயரை சூட்ட வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின் போது சூட்ட இருப்பதாக பிரபல செய்தி நிறுவனத்தின் பெயரோடு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

வெளியான செய்தி
தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அந்த புகைப்படத்தில் "மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாங்கள் அது போன்ற புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என அந்த செய்தி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டும் செய்தியானது போலியானது என தெரிய வந்திருக்கிறது.

நிலை
இந்த நிலையில் தாங்கள் அது போன்ற புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என அந்த செய்தி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டும் செய்தியானது போலியானது என தெரிய வந்திருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
”மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி” என சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு
மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டும் செய்தியானது போலியானது ஆகும்
ரேட்டிங்
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications