For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check : டிசம்பரில் தாக்கப் போகும் சூரிய புயல்! 6 நாட்கள் இருண்டு போகப் போகும் பூமி! உண்மை தானா?

Google Oneindia Tamil News

சென்னை : டிசம்பர் மாதம் சூரியனில் பயங்கர புயல் வீசப்போவதால் அந்த மாதத்தில் ஆறு நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என நாசா விஞ்ஞானிகள் கூறியதாக தகவல் ஒன்று இணையதளங்களில் செய்தி படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படி வாய்ப்பு இருக்கிறதா? செய்தி உண்மைதானா? என்பது குறித்து பார்க்கலாம்...

நாம் வசிக்கும் பூமியின் தந்தை போன்ற சூரியன் சூரிய குடும்பத்திற்கு தலைவனாக இருக்கிறது. பல ஆச்சரியங்களையும் மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சூரியனில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் என பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சூரியனின் நடப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சிரிக்கும் சூரியன், சூரியனின் நெளியும் பாம்பு என அடுத்தடுத்து பல்வேறு ஆச்சரியகர தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வேகமாக மோதியது விண்கல்.. 1 மாதங்களாக குலுங்கிய பூமி.. அழிந்தது டைனோசர் இனம்! வேகமாக மோதியது விண்கல்.. 1 மாதங்களாக குலுங்கிய பூமி.. அழிந்தது டைனோசர் இனம்!

 சூரிய புயல்

சூரிய புயல்

மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் சூரிய புயல். சூரியனில் அதீத வெப்பம் காரணமாக அதன் மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. பெரு வெப்பத்தோடு இருக்கும் இந்த புயல்களால் மற்ற கிரகங்களிலும் பாதிப்பு ஏற்படும் சூரியப் புயல்களால் பூமியில் நேரடியாக பாதிப்பு ஏற்படாவிட்டாலும் அதிலிருந்து வெளிவரும் கதிர்களால், பூமியில் இருந்து ஏவட்டும் செயற்கைக்கோள்கள் பாதிப்பு ஏற்படுகின்றன.

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

இந்நிலையில் தான் அத்தகைய புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச இருக்கிறது எனவும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த புயல் வீசத் தொடங்கும். 22ஆம் தேதி 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என நாசா விஞ்ஞானிகள் கனத்திருக்கின்றன இப்படி ஒரு தகவல் புகைப்படத்துடன் அக்டோபர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டதாக தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதற்கு ஆதாரமாக அந்த செய்தித்தாளின் கட்டிங் பரப்பப்பட்டு வருகிறது.

6 நாள் இருள்

6 நாள் இருள்

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டலத்தில் புயல் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளதாகவும், சூரிய மண்டலத்தில் புயல் வீசும் ஆறு நாட்களும் வான்வெளியில் தூசிகள் துகள்கள் சுழன்றுடிக்கப்பட்டு நிரம்பிவிடும். தூசிகள் நரம்பும்போது வானில் மாற்றங்கள் ஏற்படும் குறிப்பாக சூரிய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி அந்த தூசிகள் துகள்கள் மறைத்துவிடும் இதன் காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நாசா

நாசா

சூரிய மண்டல புயல் அருகில் வராது. எனவே உலகம் இருள் மூழ்கினாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியதில்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி துகள்கள் 220 மணி நேரத்திற்கு வானத்தை அடைத்துவிட்டது. போல் மாற்றிவிடும் அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இந்த புகைப்பட ஆதாரம் உண்மைதான். சூரிய புயல் வீசும் என்பதும் உண்மைதான். ஆனால் இந்த வருடம் வீசுவதற்கான வாய்ப்புகள் இல்லை காரணம் இந்த செய்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் பரப்பப்பட்ட செய்தியாகும். அப்போது வெளிவந்த செய்தித்தாளின் புகைப்படத்தை எடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பரப்புவது பலருக்கு வேலையாக போய்விட்டது. அந்த வகையில் தான் தற்போதும் இந்த செய்தி வெளிவந்திருக்கிறது. இந்த செய்தி போலியானது என்பதை விட மிகவும் பழையது .அப்படி பார்க்கும் பொழுது இந்த செய்திக்கும் தற்போதைய சூழலுக்கும் சம்பந்தமில்லை என்கின்ற விஞ்ஞானிகள்.

Fact Check

வெளியான செய்தி

டிசம்பர் மாதம் சூரியனில் பயங்கர புயல் வீசப்போவதால் அந்த மாதத்தில் ஆறு நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முடிவு

டிசம்பர் மாதம் சூரியனில் பயங்கர புயல் வீசப்போவதால் அந்த மாதத்தில் ஆறு நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது மிகவும் பழைய செய்தி. அப்படி நடக்கவும் இல்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
An information is being circulated on websites with a news picture that NASA scientists have said that the world will be plunged into darkness for six days during the month of December due to a terrible storm on the sun. Is there really such a chance? Is the news true?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X