For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact check : சந்திர கிரகணத்தால் இன்று வாட்ஸ் அப் இயங்காது! அதிர வைக்கும் தகவல்! உண்மை தானா?

Google Oneindia Tamil News

சென்னை : இன்று சந்திர கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் அதன் கதிர்வீச்சு தாக்கத்தால் வாட்ஸ் அப் இயங்காது என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது . அதன் உண்மை தன்மை என்ன? உண்மையிலேயே கதிர்வீச்சுக்கும் வாட்ஸ் அப்க்கும் தொடர்பு உள்ளதா என பார்க்கலாம்.

உலக அளவில் வாட்ஸ் அப் மக்களிடையே மிகப் பிரபலமான செயலியாக இருந்து வருகிறது. உலகெங்கும் மூலை முடுக்கெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

சாதாரண குட்மார்னிங் தொடங்கி, முக்கியமான தகவல்கள், கோப்புகள், படங்கள், வீடியோக்கள் என பல சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ் அப் மூலம் தான் பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

சந்திர கிரகணம் 2022 நவம்பர் LIVE: முழு சந்திர கிரகணம்..ரத்த நிலா தமிழகத்தில் எப்போது தெரியும் சந்திர கிரகணம் 2022 நவம்பர் LIVE: முழு சந்திர கிரகணம்..ரத்த நிலா தமிழகத்தில் எப்போது தெரியும்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வாட்ஸ் அப் சேவை முடங்கியது. அக்டோபர் 25ஆம் தேதி உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சில நகரங்களில் இந்த சேவை குறைபாடு ஏற்பட்டதாகவும், முக்கிய தகவல்கள் படங்கள் வீடியோக்களை அப்லோட் செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது.

முடக்கம்

முடக்கம்

வாட்ஸ் அப் முடங்கிய அன்றைய தினம் சூரிய கிரகணமாக இருந்ததால் சூரியனிலிருந்து வந்த கதிர்வீச்சு காரணமாக வாட்ஸ் அப் முடங்கியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதை அடுத்து அன்றே கணித்த முன்னோர்கள் டைப்பில் ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. சூரிய கிரகணம் முடிவடைந்த சிறிது நேரத்தில் வாட்ஸ் அப்பும் மீட்கப்பட்டது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

இந்நிலையில் உண்மையிலேயே சூரிய கிரகணத்தால் தான் வாட்ஸ் அப் முடங்கியதா என பலரும் இணையதளங்களில் தேடத் துவங்கினர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வாட்ஸ் அப் முடங்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சந்திர கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் நேற்று இருந்தே வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் "இன்று வாட்ஸ் அப் செயல்படாது முக்கியமான தகவல்களை உடனடியாக அனுப்பி விடுங்கள். சந்திரனிலிருந்து வெளியாகும் சிகப்பு கதிர்களால் வாட்ஸ் அப் சேவை முடங்கும்" என தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பொய் தகவல்

பொய் தகவல்

இதை அடுத்து இந்த தகவல் உண்மையா என பேக்ட் செக் அடிப்படையில் சோதனை செய்தபோது அது பொய்யானது என தெரிய வந்திருக்கிறது. சூரிய கிரகணத்தின் போது வாட்ஸ் அப் முடங்கியதால், சந்திர கிரகணத்தின் போதும் வாட்ஸ் அப் முடங்கும் என பரவும் தகவல் பொய்யானது எனவும் பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே சிலர் இந்த போலி தகவலை பரப்பி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

இன்று வாட்ஸ் அப் செயல்படாது முக்கியமான தகவல்களை உடனடியாக அனுப்பி விடுங்கள். சந்திரனிலிருந்து வெளியாகும் சிகப்பு கதிர்களால் வாட்ஸ் அப் சேவை முடங்கும்

முடிவு

சந்திர கிரகணத்தின் போது சந்திரனிலிருந்து வெளியாகும் சிகப்பு கதிர்களால் வாட்ஸ் அப் சேவை முடங்கும்என்ற செய்தி போலியானது ஆகும்

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
As the lunar eclipse is happening today, information is being spread on social media that WhatsApp will not work due to its radiation effect. What is its true nature? Let's see if there is really a connection between radiation and WhatsApp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X