Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழுதி வச்சுக்கங்க.. 2 லட்சம் ஆகப் போகும் தங்கம்! வெள்ளி விலையைக் கேட்டாலே வெலவெலக்கும்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்தாலும் சரிந்தாலும் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக 2026 தொடக்கத்தில், யாரும் எதிர்பாராத வேகத்தில் உச்சத்தைத் தொட்ட தங்கம், அதே வேகத்தில் கடும் சரிவையும் சந்தித்துள்ளது. இந்த திடீர் ஏற்ற இறக்கங்களுக்கு பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதே பொதுமக்கள் மத்தியில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.

2025 டிசம்பர் இறுதியில், 22 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,120 என்ற அளவில் இருந்தது. ஆனால் 2026 ஜனவரி 29ஆம் தேதி, ஒரே மாதத்துக்குள் தங்கம் விலை ரூ.1,34,400 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் பவுனுக்கு ரூ.34,000 உயர்வு என்பது இதற்கு முன் அரிதாகவே நடந்த ஒன்று.

2025 முழு ஆண்டில் 12 மாதங்களில் பவுனுக்கு ரூ.40,000 உயர்ந்திருந்த நிலையில், 2026 ஜனவரியில் மட்டும் ரூ.34,000 உயர்வு என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வேகமான உயர்வுக்குப் பிறகு, தங்கம் விலை மேலும் உயருமா? அல்லது ஒரு கட்டத்தில் சரியுமா? என்ற எதிர்பார்ப்பு பரவத் தொடங்கியது.

Gold Silver gold price

தங்கம் விலை உயர்வு

அந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லும் விதமாக, ஜனவரி 30, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 என தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் பவுனுக்கு சுமார் ரூ.7,600 என்ற அளவில் குறைந்தது. மொத்தமாக மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 சரிவு ஏற்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விலை ஏற்றத்திற்கு முதன்மை காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிவிப்புகள் கூறப்பட்டன.

ட்ரம்ப் தாக்கம்

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, எச்1பி விசா கட்டண உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை தங்கத்தின் விலையை மேலே தள்ளின. அதோடு, ஈரானில் ஏற்பட்ட போர் பதற்றம், சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவை முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், வெள்ளி பக்கம் திருப்பின. ஆனால் தங்கம் விலை திடீரென சரிந்ததற்கு முக்கிய காரணமாக, ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு குறிப்பிடப்படுகிறது.

கெவின் வார்ஷ்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக கெவின் வார்ஷை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் நிலைப்பாடு. புதிய தலைவர் கெவின் வார்ஷ், வட்டி விகிதங்களை 1 சதவீதம் வரை குறைக்கக் கூடிய கொள்கை கொண்டவர் என்ற எதிர்பார்ப்பு சந்தைகளில் உருவானது. அதே நேரத்தில், வார்ஷ் கடந்த காலங்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையான நிலைப்பாடு எடுத்தவர் என்பதும் முதலீட்டாளர்களை குழப்பியது.

தங்கம் வெள்ளி எதிர்பார்ப்பு

அவர் ஃபெட் தலைவரானால், நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது, பணப்புழக்கம் மேலும் இறுக்கமடையும் என்ற அச்சம் உருவானது. இதன் விளைவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. டாலர் வலுப்பெற்றதும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருந்த பெரிய முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்ய விற்பனை செய்யத் தொடங்கினர். இந்த 'ப்ராபிட் புக்கிங்' போக்கும் தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு காரணமாக அமைந்தது. மேலும், ஈரானுடன் அமெரிக்கா போர் நடத்தலாம் என்ற பதற்றம் குறைந்து, ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்ததும் புவி அரசியல் சூழலில் சிறு நிம்மதியை ஏற்படுத்தியது.

விலை ஏற்ற இறக்கம்

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் சில நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து, தங்கத்தில் முதலீடு செய்தன. அதன் காரணமாக, ஒரே மாதத்தில் தங்கம் விலை 25 சதவீதம் வரை உயர்ந்தது. தற்போது அந்த வாங்கும் போக்கு சற்று குறைந்திருப்பதும் விலை சரிவுக்கு ஒரு காரணம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறையுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் நிபுணர்கள் இதை தற்காலிக சரிவாகவே பார்க்கிறார்கள். புவி அரசியலில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டாலோ, 'டி-டாலரைசேஷன்' போன்ற முயற்சிகள் வலுவடைந்தாலோ தங்கம் விலை மீண்டும் உயரலாம் என்கிறார்கள். அதேபோல், சோலார் பேனல், மின் வாகனங்கள் போன்ற 'கிரீன் எனர்ஜி' துறைகளால் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கம் 2 லட்சம்

இதனை எல்லாம் கருத்தில் கொண்டால், தங்கம், வெள்ளி விலையேற்றக் காலம் முடிந்துவிட்டது என்று கூற முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.2 லட்சத்தையும், வெள்ளி ஒரு கிலோ ரூ.5 லட்சத்தையும் கடக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், 2026ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை இதற்கு முன் இல்லாத அளவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+