சாத்துக்குடி பழத்தில் இவ்ளோ? சாத்துக்குடி ஜூஸ் + சுடுநீர் குடித்து பாருங்க.. நம்ப முடியாத ஆச்சரியம்
சென்னை: ஜூரம் வந்தால்கூட, தைரியமாக குடிக்கக்கூடிய ஒரே ஜூஸ், இந்த சாத்துக்குடி ஜூஸ்தான்.. அந்த அளவுக்கு இதில் என்னென்ன பலன்கள் இருக்கிறது தெரியுமா?
வைட்டமின் C நிறைய உள்ளதுதான் இந்த சாத்துக்குடியின் பிளஸ் பாயிண்ட்டாகும்.. பொதுவாக வைட்டமின் C, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்பவை..

கொலாஜன்: நம்முடைய உடலில் இருக்கும் ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்.. நம்முடைய சருமத்தில் சுருக்கங்களை தராமல் காக்ககூடிய புரதம் இது.. முக சுருக்கத்தை சரி செய்ய உதவுவதுதான் இந்த கொலாஜன்.. சருமம் ஈரப்பதத்துடன் திகழ இந்த கொலாஜன் உதவுகிறது.. இந்த கொலாஜன் உற்பத்தி உடலில் குறையும்போது, சுருக்கங்கள் உட்பட பல தொந்தரவுகள் உடலில் ஏற்படுகிறது..
இந்த கொலாஜனை குறையாமல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. இதற்காக, மாய்சரைஸர்கள், லோஷன்களில், மாத்திரைகளில் கொலாஜன் கிடைக்கிறது என்றாலும், இயற்கையாகவே நமக்கு கொலாஜனை அள்ளித்தரக்கூடியது வைட்டமின் C உணவுகளாகும். இந்த சத்துக்கள், சாத்துக்குடியில் நிறையவே உள்ளன.
புற்றுநோய் ஆபத்து: சாத்துக்குடியை சாப்பிட்டு வந்தாலே, சருமம் பளபளப்பாகும்.. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துகிறது.. அதுமட்டுமல்லாமல், லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் இந்த சாத்துக்குடியில் உள்ளதால், புற்றுநோய்க்கான ஆபத்தை இது தடுத்து நிறுத்துகிறது.
வைட்டமின் C தவிர A, B1, பொட்டாசியம், இரும்புசத்து, கால்சியம், என பல சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது.. நீர்ச்சத்து குறைபாட்டினை இந்த பழம் அருமையாக போக்குகிறது.. இதனால் உடலிருக்கும் கழிவுகளும், நச்சுக்களும் வெளியேற துணைபுரிகிறது. ரத்தசோகை குறைபாடு உள்ளவர்கள், சாத்துக்குடி ஜூஸ் தொடர்ந்து குடித்துவந்தாலே போதும்..
நீர்ச்சத்துக்கள்: உடல் எடை குறைய முயற்சிப்பவர்களுக்கு இந்த சாத்துக்குடி ஒரு பெஸ்ட் பழமாகும். காரணம், 90 சதவீதம் இந்த பழத்தில் நீர்ச்சத்துதான் அடங்கியிருக்கிறது. வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது..
சிறுநீர் எரிச்சல், வயிறு எரிச்சல், உடல் உஷ்ணம், கண் எரிச்சல், போன்றவை இருந்தால், சாத்துக்குடி ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைத்துவிடும்.. எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடிய திறன் இந்த சாத்துக்குடிக்கு உண்டு..
சிறுநீரக தொற்று: சிறுநீரக தொற்றை அண்ட விடாமல் செய்கிறது இந்த பழம்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதய ஆரோக்கியத்தையும் காக்க செய்கிறது இந்த சாத்துக்குடி. கீல்வாதம், முடக்குவாதம் இருந்தாலும், அதற்கும் இந்த சாத்துக்குடி ஜூஸ் தீர்வாகிறது.. ஆர்த்ரைட்டீஸ் தொந்தரவு உள்ளவர்கள் இதை குடித்து வரலாம்..
சாத்துக்குடியில் சாறு எடுத்து, ஜில்லென ஜூஸ் தயாரித்து குடிப்பது போல, சாத்துக்குடியின் சாறு மருந்தாகவும் பயன்படுகிறது.. இந்த சாத்துக்குடி சாறு பிழிந்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயில் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.. தொண்டை கமறலும் தீரும். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், சாத்துக்குடி ஜூஸில் இஞ்சிச்சாறும், சீரகப்பொடியும் கலந்து குடித்தால் ஆஸ்துமாவிலிருந்து உடனடியாக நிவரணம் கிடைக்கும்.
எளிய நிவாரணம்: அல்லது மலச்சிக்கல் இருப்பவர்கள் சாத்துக்குடி சாறுடன் சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் பெறலாம்.. இதனால், மலச்சிக்கல் தீர்வதுடன், நெஞ்செரிச்சலும் நீங்கும்..!!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications