முருங்கையிலை சூப்பர்.. முருங்கைக்கீரை ஆம்லெட் தெரியுமா? முருங்கை பவுடர் போல பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை
சென்னை: அளவுக்கு அதிகமான ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் போன்ற பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டிருக்கும் முருங்கையிலையில் ஆம்லெட் எப்படி செய்வது தெரியுமா?
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்துக்களை விட 75 சதவீத அதிகமான சத்துக்களும், ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் C, பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம், கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் A, வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் கொண்டதுதான் முருங்கையிலை.

அவசியமான சத்துக்கள்: 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் கொண்ட ஒரே கீரை இந்த முருங்கைக்கீரைதான். உலர்ந்து காய்ந்து போனாலும் ஊட்டச்சத்துக்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பது இந்த முருங்கைக்கீரைதான்..
300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை இந்த முருங்கையிலைகள் குணப்படுத்துவதாகவும் ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
ஆம்லெட்: இந்த முருங்கையிலையில் சத்தான ஆம்லெட் எப்படி செய்வது தெரியுமா? 1 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் தேங்காய்ப் பூ, கால் ஸ்பூன் சீரகம் இந்த மூன்றையும் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதேபோல, வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கப் முருங்கையிலையை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இப்போது, ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில் முருங்கையிலையை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, வதக்கிய வெங்காய கலவை, கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள விழுது, இவைகளை கொட்டி கலக்க வேண்டும். இதில் ஆம்லெட் போல ஊற்றி எடுக்கலாம்.
முருங்கையிலை பொடி: அதேபோல, முருங்கையிலை பொடியை நாம் வீட்டில் தயார் செய்து வைத்து கொள்ளலாம்.. முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி, நிழலில் 3 நாட்கள் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் 2 ஸ்பூன் எள் சேர்த்து வறுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும். அதே வாணலில் சிறிது எண்ணெய், துவரம்பருப்பு, உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். இதில், பெருங்காயம், சிறிது புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மிக்ஸியில் கொட்டி, இதனுடன் காயவைத்த முருங்கையிலைகளையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
ரைஸ் ரெடி: இறுதியில், வறுத்து வைத்திருக்கும் எள்ளையும் இதிலேயே கொட்டி, லேசாக அரைக்க வேண்டும்.
இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய், கடுகு தாளித்து இந்த அரைத்த கீரைப்பொடியுடன் கலந்துவிடலாம். இந்த பொடியை, சுடுசோறில் போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய்யுடன் பிசைந்து சாப்பிட்டால் சத்தான முருங்கைக்கீரை ரைஸ் ரெடி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications