ஊதியம் ரூ.35,000.. தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடம் காலி.. 5ம் வகுப்பு முடித்தாலே போதும்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 5ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக மாதம் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் விபரம் வருமாறு:

மொத்த காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு வருவாய்த்துறையில் மொத்தம் 2,748 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இந்த பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்ப கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி சிறிய கட்டுரை எழுத வேண்டி இருக்கும். மேலும் தமிழ் வாசிக்க தெரியும் என்பதை காட்டும் வகையில் சில தமிழ் பாராக்களை படித்து காண்பிக்க வேண்டி இருக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 7 ம் தேதி கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications