Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

596 காலியிடங்கள்.. ரூ.40,000 முதல் ரூ.1.40 வரை மாத சம்பளம்.. விமான ஆணையத்தில் வேலை செய்ய ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமான ஆணையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக 596 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பவம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விமான ஆணையம் (Airports Authority Of India or AAI) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் மொத்தம் 596 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த பணிகளுக்கு 4 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட இருக்கிறது. அதன்படி Junior Executive (Engineering-Civil) பிரிவில் 62 பேர், Junior Executive (Engineering-Electrical) பிரிவில் 84 பேர், Junior Executive (Electronics) பிரிவில் 440 பேர், Junior Executive (Architecture) பிரிவில் 10 பேர் என மொத்தம் 596 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த 4 பிரிவு Junior Executive பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 21.01.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வுகள் உண்டு. அரசு விதிகளின் படி மற்றவர்களுக்கு அதிகபட்சமாக 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படும்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Junior Executive (Engineering-Civil) பணிக்கு விண்ணப்பம் செய்லவர்கள் சிவில் என்ஜினீயரிங் படிப்பையும், Junior Executive (Engineering-Electrical) பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பையும், Junior Executive (Electronics) பணிக்கு எலக்ட்ரிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். மேலும் Junior Executive (Architecture) பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இளங்கலை Architecture படிப்பை முடித்திருப்பதோடு அதற்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

 மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

Junior Executive பணிக்கு தேர்வாகும் நபர்களுக்க மாதம் குறைந்தபட்சமாக ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் Short List செய்யப்பட்டு GATE மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்பட்டு சான்று சரிபார்ப்புக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை www.aai.aero எனும் இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து உரிய விபரங்களுடன் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி 21ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+