திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: திருப்பூரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.57 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான சைனிக் பள்ளி உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக இவை உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளியில் வேலை
6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில், அகில இந்திய நுழைவுத் தேர்வு (AISSEE) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளி என்பதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், நல்ல சலுகைகள் கிடைக்கின்றன.
இந்த நிலையில், சைனிக் பள்ளியில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள் விவரம்:
பொது ஊழியர் (MTS) - 13
PEM/PTI - மேட்ரன் (பெண்) (ஒப்பந்த அடிப்படை) - 01
வார்டு பாய்ஸ் (ஒப்பந்த அடிப்படை) - 03
என மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன
கல்வித் தகுதி:
எம்.டிஎஸ் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். எலக்ட்ரிஷியன், பிளம்பரிங், டிரைவிங், டெய்லர், சிசிடிவி மெயிண்டனஸ் உள்ளிட்ட துறையில் கல்வித் தகுதியோ, அனுபவமோ இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்து இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்று இருக்க வேண்டும்.
* பிஇஎம், பிடிஐ - மேட்ரான் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் பேச தேரிந்து இருக்க வேண்டும். உறைவிட பள்ளிகளில் மானவர்களை கையாளும் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
* வார்ட் பாய்ஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலம், இந்தி/ தமிழ் முடித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வயது வரம்பு:
01.05.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
பொது ஊழியர் (MTS) - நிலை-1 ரூ.18,000 - 56,900/-
PEM/PTI - மேட்ரன் (பெண்) - ரூ.25,000/-
வார்டு பாய்ஸ் (ஒப்பந்த அடிப்படை) - ரூ.22,000/- முதல் ரூ.25,000/- வரை
திறன்/தொழில் தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ST/SC விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500/-
கட்டண முறை: ஆன்லைன்
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.php
-
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications