பணம் அச்சடிக்க ரெடியா?.. அழைக்கும் நாசிக் நிறுவனம்.. மாத சம்பளம் ரூ.95,000ல் அசத்தலான வேலைவாய்ப்பு
டெல்லி: நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.95 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் இந்த பணிகளுக்கு டிகிரி, என்ஜினீயரிங், ஐடிஐ முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் பணம் அச்சடிக்கும் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ளது. Currencey Note Press அல்லது CNP என இது அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன்-பிரிண்டிங்) பிரிவில் 10, சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன் - எலக்ட்ரிக்கல்) பிரிவில் 2, சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன் - எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 2, சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன் -மெக்கானிக்கல்) பிரிவில் 2, சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன் - ஏர் கண்டிஷனிங்) பிரிவில் 1, சூப்பர்வைசர் (Envirionment) பிரிவில் 1, சூப்பர்வைசர் (Informaion Tehnology) பிரிவில் 4, ஜூனியர் டெக்னீசியன் (Printing/Control) பிரிவில் 103 என மொத்தம் 125 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
சூப்பர்வைசர் வகையிலான பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது பிஇ, பிடெக் மற்றும் பிஎஸ்சி பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் (Printing/Control) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
சூப்பர்வைசர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் என அனைத்து பணிக்கும் விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 10 வயது வரையும் விலக்கு உண்டு. மேலும் அரசு விதிகளின் படி மற்றவர்களுக்கு வயது தளர்வு என்பது உண்டு.

மாத சம்பளம் எவ்வளவு?
சூப்பர்வைசர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்த பட்சம் ரூ.27,600 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.95,910 வரை வழங்கப்படும். அதேபோல் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 12 ம் தேதி (16.12.2022) கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்படுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் என்பது கிடையாது. இருப்பினும் இன்டிமேஷன் கட்டணமாக ரூ.200 செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்யும் நபர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications