ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம்.. காஞ்சிபுரத்திலேயே மத்திய அரசு பணி.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் வரை சம்பளத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரக்கடம் பகுதியில் மத்திய அரசின் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம் (Global Automotive Research Centre OR GARC) செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் ஓரக்கடத்தில் செயல்பட்டு வரும் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
ஓரக்கடம் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி உதவி பொது மேலாளார் (Assistant General Manager) பணிக்கு 5 பேர், சீனியர் மேலாளர் (Senior Manager) பணிக்கு 3 பேர், துணை மேலாளர் ஐடி (Deputy Manager IT), உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கு தலா ஒருவர், சீனியர் என்ஜினீயர்( Senior Engineer) பணிக்கு 4 பேர், Graduate Engineer Trainee பணிக்கு 21 பேர் என மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சீனியர் மேலாளர் பணிக்கு 43 வயதுக்குள்ளும், துணை மேலாளர் ஐடி பிரிவுக்கு 35 வயதுக்குள்ளும், உதவி மேலாளர் (Procurement Department) பணிக்கு 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். சீனியர் என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்குள்ளும், ஜிஇடி பிரிவு பணிக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழங்களில் சம்பந்தப்பட்ட துறைகளில் பிஇ, பிடெக் படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
உதவி பொது மேலாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 வரை வழங்கப்படும். சீனியர் மேலாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 700 வரை வழங்கப்படும். துணை மேலாளர் ஐடி பிரிவு மற்றும் உதவி மேலாளர் (Procurement Department) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.53 ஆயிரத்து 100 முதல் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 800 வரை வழங்கப்படும். சீனியர் என்ஜினீயர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வழங்கப்படும். ஜிஇடி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.25 ஆயிரம், 2ம் ஆண்டில் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.garc.co.in/ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜனவரி 27 ம் தேதி கடைசிநாளாகும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல், ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications