மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை.. கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள்! மாதம் ஒரு லட்சம் சம்பளம்
சென்னை: தேசிய கதிர்வீச்சு வானியற்பியல் மையத்தில் (NCRA Job) பணியாற்ற அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிளார்க், ஒர்க் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி, டிப்ளமோ, பி.இ, பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 23 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பதவிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேசிய கதிர்வீச்சு வானியற்பியல் மையம் (NCRA), டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் (TIFR) கீழ் செயல்பட்டு வரும் நிறுவமனாகும். நாட்டின் வானியல் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் விண்வெளி கதிர்வீச்சுகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிளார்க்-ஏ, ஒர்க் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட்-பி உள்ளிட்ட பல பதவிகள் நிரப்பப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
கிளார்க்-ஏ, ஒர்க் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட்-பி உள்ளிட்ட பல பதவிகளுக்கு
மொத்தமாக 38 பணியிடங்கள் புனே, கோதட், ஊட்டி ஆகிய இடங்களில் நிரப்பப்படவுள்ளன. இந்த ஆட்சேர்ப்புகள் வழக்கமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
டெக்னிக்கல் டிரெய்னி (டெலஸ்கோப் ஆப்ஸர்வர்) (ஊட்டி) - 2 பதவிகள்
டெக்னிக்கல் டிரெய்னி (எலெக்ட்ரிக்கல்) (ஊட்டி) - 1 பதவி
சயின்டிபிக் அசிஸ்டென்ட்-பி (டெலஸ்கோப் ஆப்ஸர்வர்) (ஊட்டி) - 1 பதவி
ஒர்க் அசிஸ்டென்ட் (ஊட்டி) - 1 பதவி
கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம்:
பொதுவாக டிப்ளமோ, பிஎஸ்சி, பி.இ, பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சில பதவிகளுக்கு அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு (20.03.2026 நிலவரப்படி):
அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். இருப்பினும், சில பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிமுறைகளின்படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள் கூடுதல் தளர்வு.
OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள் கூடுதல் தளர்வு.
PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள் கூடுதல் தளர்வு.
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள் கூடுதல் தளர்வு.
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள் கூடுதல் தளர்வு.
முன்னாள் ராணுவத்தினருக்கு: அரசு கொள்கையின்படி தளர்வு.
சம்பளம் எவ்வளவு
இன்ஜினியர் டிரெய்னி (சிவில்), இன்ஜினியர் டிரெய்னி (சர்வோ), இன்ஜினியர் டிரெய்னி (டிஜிட்டல்): ₹35,000/-
டெக்னிக்கல் டிரெய்னி (எலெக்ட்ரிக்கல்), டெக்னிக்கல் டிரெய்னி (சிவில்), டெக்னிக்கல் டிரெய்னி (டெலஸ்கோப் ஆப்ஸர்வர்): ₹23,000/-
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (சிவில்): ₹63,900/-
ப்ராஜெக்ட் இன்ஜினியர்-சி (மெக்கானிக்கல்), ப்ராஜெக்ட் இன்ஜினியர்-சி (சிவில்): ₹1,03,400/-
அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிரெய்னி: ₹22,000/-
இன்ஜினியர்-சி (எலெக்ட்ரிக்கல்), இன்ஜினியர்-சி (சிவில்): ₹99,936/-
சயின்டிபிக் அசிஸ்டென்ட்-பி (ஐடி): ₹72,240/-
சயின்டிபிக் அசிஸ்டென்ட்-பி (டெலஸ்கோப் ஆப்ஸர்வர்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-பி (சிவில்): ₹62,316/-
லேபரேட்டரி அசிஸ்டென்ட்-பி (எலெக்ட்ரானிக்ஸ்): ₹39,300/-
கிளார்க்-ஏ: ₹46,484/-
ஒர்க் அசிஸ்டென்ட்: ₹31,662/-
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு/சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tinyurl.com/ncrajob2026 என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை உறையின் மீது குறிப்பிட்டு,
"The Administrative Officer-D (Establishment),
NCRA-TIFR, Post Bag 3,
Ganeshkhind, Savitribai Phule Pune University Campus,
Pune 411007"
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி: 20.02.2026
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2026
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை பார்வையிட http://www.ncra.tifr.res.in/hravt/documents/advtE.pdf
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications