For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு! ஏராளமான பணிகள்! ரூ.56,000 முதல் ரூ.2 லட்சம் வரை ஊதியம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 தேர்வுக்கான பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்.. கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து புதிய அறிவிப்பு!டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்.. கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து புதிய அறிவிப்பு!

 மொத்த காலியிடங்கள் எவ்வளவு?

மொத்த காலியிடங்கள் எவ்வளவு?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி துணை கலெக்டர் பணிக்கு 18, துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26, வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13, கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 இடங்கள் என மொத்தம் 93 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 வயது வரம்பு எவ்வளவு?

வயது வரம்பு எவ்வளவு?

வணிக வரி உதவி கமிஷனர் பதவியை தவிர பிற பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்), பிசிஎம், விதவைகளுக்கு 39 வயதாக தளர்வு அளிக்கப்ட்டுள்ளது. வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு மேற்கூறிய வயது வரம்பு பின்பற்றப்பட்டாலும் கூட பிஎல் டிகிரி முடித்தவர்களுக்கான வயது வரம்பு 21 வயதில் இருந்து எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்), பிசிஎம், விதவைகளுக்கு 40 வயதாகவும், மற்றவர்களுக்கு 35 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 கல்விதகுதி- மாத ஊதியம் எவ்வளவு?

கல்விதகுதி- மாத ஊதியம் எவ்வளவு?

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை மாத ஊதியமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்க கடைசிநாள் என்ன ?

விண்ணப்பிக்க கடைசிநாள் என்ன ?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tnpscexams.in இணையதளம் மூலம் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லுக்காக ரூ.150, Preliminary தேர்வு கட்டணமாக ரூ.100, மெயின் தேர்வுக்கான கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை

 தேர்வு எப்போது?

தேர்வு எப்போது?

மேலும், விண்ணப்ப திருத்தத்துக்கான காலஅவகாசம் 27.08.2022 மதியம் 12 மணி முதல் 29.08.2022 மதியம் 11.59 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான Preliminary தேர்வு 30.10.2022ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். மெயின் தேர்வுக்கான தேதி பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
Tamil Nadu Government Staff Selection Commission (TNPSC) has released the notification for Group 1 exam vacancies. A monthly salary of Rs.56,100 to Rs.2 lakh has been fixed for this job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X