டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்று டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.
Recommended Video
துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 91 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் அதிக அளவிலான பட்டதாரிகள் விண்ணப்பிப்பார்கள் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி இந்தாண்டு குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டது.

எத்தனை பதவிகள் காலி
துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்களில் என உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் அதில் அடங்கும். அறிவிப்பு வெளியானது.

முதல்நிலை தேர்வு
முதல் நிலை தேர்வுக்கு www.tnpsc.gov.in வாயிலாக விண்ணப்பித்தலும் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதனால், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்ய வாய்ப்பு
இன்றைய தினம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. இந்த நிலையில் இணைய வழி விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ல் தேர்வு
தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications