For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அதாவது.. உன் கடைல ரூ.50 ஊத்தப்பம் வாங்கி சாப்டா வராம தடுக்கும் அப்படிதானே".. வைரலாகும் வைரஸ் மீம்ஸ்

கொரோனா வைரஸ் குறித்த மீம்கள் வைரலாகி வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது.. எங்கு பார்த்தாலும் அதுகுறித்த பேச்சும், பீதியுமாகத்தான் இருக்கிறது. இந்தியாவிலும் அதன் அறிகுறிகள் சில இடங்களில் தென்படுவதால் மக்கள் பதட்டமாகவே உள்ளனர். ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று அரசுகள் அறிவித்து போர்க்கால நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன.

நம்மவர்களுக்குத்தான் இந்த மீம்ஸ் பைத்தியம் ஜாஸ்தியா இருக்கே. எது வந்தாலும் உடனே அதை வைத்து மீம்ஸ் போட்டு பொழுதைப் போக்காவிட்டால் அவர்களுக்குப் பொழுதே போகாதே.

சுனாமி பீதி வந்தபோது கூட பீச்சுக்குப் போய் செல்பி எடுக்க காத்துக் கிடந்த பயலுகதானே நம்ம பயலுக. அந்த அடிப்படையில் தற்போது கொரோனா வைரஸை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதிலிருந்து சில உங்களுக்கு.

அண்ணன் கடை ஊத்தப்பம்

சின்ன வெங்காயத்தால் செஞ்ச தோசையை வாங்கி சாப்பிட்டா கொரோனா வைரஸே வராது என்று இந்த கடைக்காரர் போர்டு வைத்தாலும் வைத்தார். இவரை வைத்து ஓட்டிக் கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில். "அதாவது உலகமே பார்த்து நடுங்குற கொரோனா வைரஸ உன் கடைல விக்கிற ரூ.50 ஊத்தப்பம் வாங்கி சாப்டா வராம தடுக்கும் அப்படிதானே" என்று இவர் நக்கலடித்துள்ளார்.

யாரு சொன்னா புரோ

இப்படி ஒரு உரையாடல்.. சமூக வலைதளங்களில் ஓடிக் கொண்டிருக்கு.. " ப்ரோ...அமெரிக்கா மிக ரகசியமா கொரோனா வைரஸ சீனாவுல பரப்பி விட்ருக்கு...." "அவனுக அவ்ளோ ரகசியமா கொரொனா வைரஸ பரப்புன விசயம் உனக்கு மட்டும் எப்டிடா தெரிஞ்சுச்சு ?" "செங்கல் சூளைல வேல பாக்குற என் ப்ரண்டு பால்பாண்டி வாட்சப்ல சேர் பண்ணியிருந்தான் ப்ரோ..." இப்படித்தான் நம்ம பொழப்பு பார்வேர்ட் மெசேஜ்களாக ஓடிட்டிருக்கு பாஸு.

நம்ம கிட்டயேவா

நம்ம ஊரில் இப்போதெல்லாம் மக்கள் படு தெளிவாக உள்ளனர். காய்ச்சல் வந்தால் போதும் எடு அந்த நில வேம்பு கஷாயத்தை என்று கிளம்பி விடுகிறார்கள். இப்போது கொரோனா வைரஸுக்கும் இந்த நில வேம்பு கஷாயம்தான் நமக்குக் கை கொடுக்கும் போல.. அதை வைத்து இந்த காமெடி.. கொரோனா வைரஸ் பரவுகிறது" - செய்தி அரசு மருத்துவமனை : "கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ்ஸ எடு...!!" நிலவேம்பு கஷாயம்!

சீனா சாமான் மாதிரி

சீனப் பொருட்களுக்கென்று ஒரு மகத்துவம் இருக்கு. அதாவது ஆயுள்காலம் ரொம்பக் கம்மி. தரம் இருக்காது. போனா போனதுதான்.. ரிப்பேரெல்லாம் பார்க்க முடியாது. அந்த மாதிரி இந்த வைரஸும் வந்த வேகத்தில் போயிடணும்னு இவர் வேண்டிக்கிறார். "செய்னா சாமான் மாறியே அங்க இருந்து வந்த இந்த கொரோனா வைரசும் ரெண்டுநாள்ல வேலைசெய்யாம போய்டணும் இறைவா !!!!"

கிளப்பி விடாதீங்கடா

இப்பத்தான் வெங்காய விலை குறைஞ்சிருக்கு. இந்த நேரத்தில் சின்ன வெங்காயம் சாப்பிட்டா கொரோனா வைரஸ் வராதுன்னு போட்ட விளம்பரத்துக்கு எதிர் பாட்டுதான் இந்த மெசேஜ். " கொரோனா வைரஸ் தாக்காமலிருக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்...! காரைக்குடி ஹோட்டல் விளம்பரம் அடேய்களா இப்பதான்டா வெங்காய விலை குறைஞ்சிருக்கு அதுபுடிக்கலையாடா"

English summary
coronavirus crisis: viral memes in social media about virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X