தடை போட்டா எனக்கென்ன.. நான்லாம் இன்னும் ஒரு தடவைக்கூட ‘அதை’ சாப்பிட்டது இல்ல!
சென்னை: செய்திகளில் அதிகம் அடிபடும் வார்த்தையாகிவிட்ட ஷவர்மா பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் கொடிகட்டி பறக்கின்றன.

பிரியாணிக்கு அடுத்தபடியாக நம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகிவிட்டது ஷவர்மா. ஆனால் கேரளா துயர சம்பவத்துக்குப் பிறகு ஷவர்மா பற்றிய பயம் அதிகமாக பரவி வருகிறது. அதோடு ஆங்காங்கே ஷவர்மா சாப்பிட்டவர்கள் உடல்நலக் குறைவுக்கு ஆளாவதாக செய்திகள் வெளிவருவதும் ஷவர்மா மீதான பயம் அதிகரிக்க மற்றொரு காரணம்.

மக்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளின் அதிரடி ரெய்டு ஒருபுறம் தீவிரமெடுத்திருக்க, ஷவர்மா பற்றிய விவாதங்களும் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகின்றன.

இதற்கிடையே ஷவர்மாவை வைத்து மீம்ஸ் போடவும் நெட்டிசன்கள் தவறவில்லை. கூடவே ஷவர்மாவுக்கு துணையாக உப்புமாவையும் சேர்த்துக் கொண்டுள்ளனர் மீமர்கள்.

அப்படி இணையத்தில் உலா வரும் ஷவர்மா மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...