இறப்பு பதிவு செய்யமட்டும் ஆதார் வேண்டுமா? இல்லை இறப்பதற்கே ஆதார் வேண்டுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறப்பு சான்றிதழ் பெற ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கே கொந்தளித்த மக்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இறப்பு சான்றிதழ் பெற ஆதார் கார்டு அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் கொடூரமாக கலாய்த்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

இறப்பதற்கே வேண்டுமா?

இறப்பு பதிவு செய்யமட்டும் ஆதார் வேண்டுமா? இல்லை இறப்பதற்கே ஆதார் வேண்டுமா? என கேட்கிறது இந்த டிவிட்

ஜெயில்ல போடுவங்களோ?

அக்.1முதல் இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் கட்டாயம்-செய்தி # ஆதார் கார்ட் காட்டாம செத்தவங்கள தோண்டி எடுத்து ஜெயில்ல போடுவங்களோ? டவுட் என்கிறார் இந்த நெட்டிசன்

அதுக்கு முன்னாடி செத்துருங்க

அக்1 முதல் இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் அவசியம் #இல்லாதவங்க அதுக்கு முன்னாடி செத்துருங்க என கலாய்க்கிறது இந்த டிவிட்

சாவுக்கு வந்த கொடுமை

இறப்பு சான்றிதழ் பெற ஆதார் அவசியம்-மத்திய அரசு என்னடா சாவுக்கு வந்த கொடுமை என்கிறார் இந்த நெட்டிசன்

நிம்மதிய கெடுக்குறிங்களே

இறப்பு சான்றிதழுக்கு ஆதார் அவசியம்-செய்தி குடும்பத்துல நிம்மதி இல்லனு சாவபோனா செத்ததுக்கு அப்புறம் அவங்க குடும்பத்தோட நிம்மதிய கெடுக்குறிங்களே என கேட்கிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Central govt announce that Aadhar card is mandatory to get death certificate. Netizens making fun of this govt announcement.
Please Wait while comments are loading...