கிணறு வெட்டின ரசீது இருக்குங்குற மொமன்ட்.. தமிழிசையை கலாய்க்கும் கமல் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை தொடர்புகொண்ட ஆதாரத்தை அக்கட்சி வெளியிட்டதை தொடர்ந்து கமலின் ரசிகர்கள் தமிழிசையை கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கமல் தனது மக்கள் நீதி மய்யத்தில் தன்னை கேட்காமலேயே உறுப்பினராக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். இது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழிசை தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என விளக்கமளித்த மக்கள் நீதிமய்யம் அதற்கானா ஆதாரத்தையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழிசையை கலாய்க்க தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அட்மின் நீக்கம்

ஆதலால் எங்கள் அக்கா மங்கையர் திலகம் சொல்லிக் கொள்வது என்னவென்றால் அட்மினின் ஆவி அக்காவின் உடம்பில் புகுந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளது. அவரை இன்று பேச வைத்ததும் அட்மினின் ஆவியே. பின்குறிப்பு : அட்மின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.. என கிண்டலடிக்கிறார் இந்த ரசிகர்

ஒரு குறும்படம்

அக்காவுக்கும் ஒரு குறும்படம் போட்டுடிங்க ஆண்டவரே... என்கிறார் இந்த வலைஞர்

வேலையா போச்சு

இந்த ஆண்டவருக்கு குறும்படம் போட்டு காட்டுறதே வேலையா போச்சு... என கூறுகிறார் இந்த நெட்டிசன்

அந்த காலத்து கமல் ரசிகை

விடுங்கப்பா தெரியாம செஞ்சுட்டாங்க. அவங்க அந்த காலத்து கமல் ரசிகை.. என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

தமிழிசை விளக்கம்

இதற்கு அந்த அட்மின் தான் காரணம்- தமிழிசை விளக்கம்.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

ரசீது இருக்குங்குற மொமன்ட்

கிணறு வெட்டின ரசீது இருக்குங்குற மொமன்ட்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

ரெஜிஸ்டர் பண்ணி இருக்குமோ?

ஒருவேளை மேடத்தோட ADMIN ரெஜிஸ்டர் பண்ணி இருக்குமோ? என கேட்டு கலாய்க்கிறார் இந்த வலைஞர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Tamilisai after Makkal Needhi Maiam releasing proofs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற