இனிய உளவாக இன்னாது கூறல் பிரியாணி இருப்ப கிச்சடி கவர்ந்தற்று..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என்னங்க சொல்றீங்க.. "கிச்சடி" இந்தியாவின் தேசிய உணவா??- வீடியோ

  சென்னை: கிச்சடி தேசிய உணவு என அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலை வைத்து வகை வகையாக கிண்டியுள்ளனர் நெட்டிசன்கள்.

  கிச்சடி தேசிய உணவு என மத்திய அரசு அறிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை உணவுத்துறையின் அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் மறுத்துள்ளார்.

  இருப்பினும் அதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்... கிச்சடி தொடர்பாக நெட்டிசன்கள் பகிர்ந்த சில கருத்துக்கள் உங்களுக்காக...

  யோசிக்கனும்ன்னு தோனுது

  என்னது கிச்சடி தேசிய உணவா? இப்படியெல்லாம் யோசிக்கனும்னு எப்படி அவங்களுக்குத் தோனுது?!?! என்கிறார் இந்த வலைஞர்

  தேசிய உணவை அறிவிக்கலாம்

  தேசிய உணவாக கிச்சடி அறிவிக்கப்படுமாம் #முதலில் எல்லோருக்கும் வேளா வேளைக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்ங்க, அப்புறமா தேசிய உணவை அறிவிக்கலாம்.. என்கிறார் இந்த நெட்டிசன்

  கிச்சடி கவர்ந்தற்று

  இனியஉளவாக இன்னாது கூறல் பிரியாணி இருப்ப கிச்சடி கவர்ந்தற்று... திருக்குறளை வைத்து கிச்சடி குறித்து டிவிட்டியுள்ளார் இந்த வலைஞர்

  கொடி பிடிக்கவில்லையா?

  கிச்சடி தான் இந்திய தேசிய உணவாமே, உப்புமா அன்பர்கள் கொடி பிடிக்கவில்லையா? என கேட்கிறது இந்த டிவிட்

  வடக்கு கிச்சடியா இருக்கே..

  இந்த வெண்டைக்காய் தயிர் கிச்சடியெல்லாம் இப்ப சிலபஸ்லேருந்து எடுத்திட்டாங்களா? டிவிட்டர்ல தெரியற கிச்சடி எல்லாமே வடக்கு கிச்சடியா இருக்கே.. என்கிறார் இந்த வலைஞர்

  ரவை உப்புமா = ரவை கிச்சடி

  இன்று முதல்..
  அரிசி உப்புமா = அரிசி கிச்சடி,
  ரவை உப்புமா = ரவை கிச்சடி
  இடிலி உப்புமா = இடிலி கிச்சடி
  என்றழைக்கப்படும்!! என டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்

  கிச்சடி வடநாட்டு சொல்.

  உப்புமா என்பது தமிழ் சொல்..
  கிச்சடி என்பது வடநாட்டு சொல்...
  #கொளுத்தி விடுவோம்... என்கிறார் இந்த வலைஞர்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Kichadi on Social media. A rumour spreaded that Kichadi have been announced as national food.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற