லட்சுமியை விட்டு வைக்காத மீம்ஸ் கிரியேட்டர்கள்- செம ட்ரோல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
லட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்?- வீடியோ

சென்னை: லட்சுமி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சோஷியல் மீடியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்களும் இப்போது லட்சுமியை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ரெய்டையும் தாண்டி சோசியல் மீடியாவில் பேசப்பட்ட குறும்படம் லட்சுமி. லட்சுமி நல்லவளா? கெட்டவளா? சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார் என்று ஒருபக்கம் பேசினார்கள்.

கள்ளக்காதலை பெண்களே ஊக்குவிக்கிறார்களா என்று இன்னொரு பக்கம் பேசினார்கள். அடப்பாவிகளை, பெண்ணை கரெக்ட் பண்ண பாரதியார் கவிதைதான் கிடைத்ததா என்று தலையில் அடித்துக்கொண்டார்கள். இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் கைகளில் வசமாக சிக்கிவிட்டாள் லட்சுமி.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

லட்சுமியின் முதல் நடவடிக்கைகளை வைத்து வடிவேலு பேசும் டயலாக்குகளை பஞ்ச் அடித்துள்ளனர். செம மேட்சிங்.

இது ஒரு வாழ்க்கையா

இது ஒரு வாழ்க்கையா

இயந்திர தனமான வாழ்க்கையை வைத்து கவுண்டமணி பஞ்ச் டயலாக்குகள் செம கிளாஸ். இப்படி குடும்பம் நடத்துனா பொண்டாட்டி எப்படி இருப்பா என்று கேட்கிறார் கவுண்டர்.

தாங்கலையேப்பா

தாங்கலையேப்பா

லட்சுமியும், கதிரும் சந்திப்பதை வைத்து வடிவேலுவின் ஏட்டையா காமெடியும், கதிர் சொல்லும் பாரதியார் கவிதைகளை வைத்து சச்சின் பட வடிவேலு காமெடியும் போட்டு கலக்கியுள்ளனர்.

பார்றா... பார்றா...

பார்றா... பார்றா...

வடிவேலு படத்தின் கண்டமனூர் ஜமீன் காமெடி எந்த காலத்திலும் மறக்கவே முடியாத காமெடி. லட்சுமியிடம் பாரதியார் கவிதை பேசி கதிர் கரெக்ட் செய்ததை வைத்து கண்டமனூர் ஜமீன் காமெடியை மேட்ச் செய்துள்ளனர்.

இங்கேயும் வடிவேலுதான்

இங்கேயும் வடிவேலுதான்

கடைசியில் லட்சுமி பஸ்சில் போகப்போவதாக கூறியதை வைத்து வடிவேலுவின் பஸ் காமெடியை மேட்ச் செய்துள்ளனர். எப்படிப்பா இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ? லட்சுமியை வைத்து இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lakshmi has become a boom for memes creators now.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற